விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே மூக்கையூர் கடலில், சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிதந்து வந்து ஓசன் குளம் கிராமத்தில் தங்கிய இடத்தில் சுருவ வடிவில் சிலுவை அமைந்துள்ள தூய வியாகுல அன்னை என அழைக்கக்கூடிய காட்டு மாதா கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் கணக்கி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி கொண்டிருந்த தூய வியாகுல அன்னை சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு முக்கையூர் கடலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிதந்து வந்த சுருவ வடிவிலான சிலுவை ஓசன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. கடலில் மிதந்து வந்த சிலுவை அமைந்துள்ள பகுதியில் மிகவும் பழமையான வியாகுல அன்னை மாதா திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான கோயில் என கூறப்படுகிறது. இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் மோஷன் குளம் என்ற கிராமம் இருந்துள்ளதாகவும் நாளடைவில் கிராம மக்கள் முழுவதும் இடம்பெயர்ந்து அறையில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலை காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் காட்டு மாதா கோவில் என்றும் அழைக்கின்றனர்.
காட்டு மாதா கோயிலில் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் வழிபாடு நடத்துகின்றனர். மாதாவுக்கு பொங்கல் வைத்தும் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் சிறிய வடிவிலான சிலுவையில் தேங்காய் எண்ணெய் மல்லிகை பூ வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அனைத்து மக்களின் சார்பாக சமத்துவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோயில் நிர்வாகி தமிழ் கண்ணன் கூறியதாவது, காட்டு மாதா கோயில் என்று அழைக்கக்கூடிய தூய வியாகுல அன்னை திருக்கோயில் மிகவும் புண்ணிய பூமியாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவிலாகும். மாதாவின் மகிமையை அறிந்து உள்ளூர் வெளியூர் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து மாதாவை வணங்கி செல்கின்றனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முறையான சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.