ஹோம் /விருதுநகர் /

விருதுநகரை மாநிலத்தில் முதலிடத்துக்கு உயர்த்த பொதுத்தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகிவரும் மாணவர்கள்..

விருதுநகரை மாநிலத்தில் முதலிடத்துக்கு உயர்த்த பொதுத்தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகிவரும் மாணவர்கள்..

பள்ளி

பள்ளி மாணவர்கள்

Virudhunagar News | பொது தேர்வுக்கு மாணவர்கள் எப்படியெல்லாம் தயாராகி வருகின்றனர் என தெரிந்து கொள்ள விருதுநகர் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்த போது, எங்களுக்கு தேர்வினை பற்றிய பயம் இல்லை என்றனர் தேர்வுக்கு தயாராகி வரும் 2K கிட்ஸ்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டும் உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கல்விக்கூடங்களும் பழைய நிலைக்கு திரும்பயுள்ளன. கொரோனா அலையில் கல்வி முறையே முற்றிலும் மாறிய நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் வகுப்புகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொது தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு விட்டது.

பொதுவாக கொரோனாவுககு முன்னர் இந்த சமயத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பற்றிய பயம் அதிகமாகவே காணப்படும். அதனால் வருகின்ற பொது தேர்வுக்கு மாணவர்கள் எப்படியெல்லாம் தயாராகி வருகின்றனர் என தெரிந்து கொள்ள விருதுநகர் மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்த போது, எங்களுக்கு தேர்வினை பற்றிய பயம் இல்லை என்றனர் தேர்வுக்கு தயாராகி வரும் 2K கிட்ஸ்கள்.

இதுகுறித்து பேசிய 12-ம் வகுப்பு மாணவி காயத்ரி, ‘நான் பயோ மேக்ஸ் குரூப் படிக்குறேன். எனக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மிகவும் பிடித்த பாடம். அதனால் அன்றைய பாடங்களை தினசரி படிப்பேன். தமிழ் வகுப்பில் ஆசிரியர் வருவதற்கு முன்பாக இருக்கும் நேரத்தில் மனப்பாட பாடல்களை படித்து வருவதால் அதுவும் சுமையாக இல்லை. தற்போது பொதுத்தேர்வு வருவதால் அதை மனதில் வைத்து படித்து வருகிறேன். இன்னொரு பக்கத்தில் நீட் தேர்விற்கும் படித்து வருகிறேன். மருத்துவ துறையில் சேர்வது தான் எனது லட்சியம்.

மேலும் படிக்க :  திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

தேர்வு குறித்து பேசிய மாணவன் ராமசந்திரன், ‘board exam time table வந்து விட்டதால், தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன். எதையும் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பதால், படித்தவை அப்படியே மனதில் நிற்கிறது. வருகின்ற பொது தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.

மாணவி அர்ச்சனா பேசும்போது, ‘தினசரி காலை எழுந்து கடினமான பாடங்களை படித்து விடுவேன். இதனால் கடினமானவை கூட எளிதாகிவிடும். எங்கள் வீட்டிலும் நான் எழுந்து படிக்க உறுதுணையாக இருப்பதால், தேர்வு பயம் இல்லாமல் தேர்வினை எதிர் கொள்ள தயாராகி வருகிறேன்.

மேலும் படிக்க :  திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

மாணவன் மதன் குமார் பேசும்போது, ‘எனக்கு விலங்கியல் பாடம் மிகவும் பிடிக்கும். இயற்பியல், வேதியியல் சற்று கடினம். எனினும், ஆசிரியர்களின் உதவியோடு சந்தேகங்களை கேட்டு படித்து வருகிறேன். முக்கியமாக படித்ததை எழுதி பார்ப்பதால் படிக்க எளிமையாக உள்ளது.

மாணவி ஆதிமதி பேசும்போது, ‘பாடங்களை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, படித்து வருகிறேன். அதனால் படிக்க எளிமையாக உள்ளது. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருவதால் வருகின்ற பொது தேர்வு பற்றிய பயமோ கவலையோ இல்லை. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாணவர்களின் கூற்றுப்படி, அன்றைய பாடங்களை அன்றே படித்து அதில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, படித்தால் நிச்சயம் தேர்வில் வெல்லலாம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar