விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளில் இரவு நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவசரகால சிகிச்சை மற்றும் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழக அரசால் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது அவசர கால சிகிச்சை மற்றும் விபத்து காலத்தில் விரைந்து செயல்பட்டு மக்களின் உயிர் காக்கும் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, ரெட்டியாபட்டி, பாலவநத்தம், எரிச்சநத்தம், இராஜபாளையம் (வடக்கு) உட்பட 9 இடங்களில் இரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பற்றாக்குறை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சில பணியாளர்கள் அங்கு மாற்றப்பட்டுள்ள காரணத்தால் பணியாளர் பற்றாக்குறை குறை ஏற்பட்டு இரவு நேரத்தில் சேவை வழங்க முடியாமல் போவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தற்போது புதிய பணியாளர்கள் பயிற்சியில் இருப்பதாகவும் அவர்கள் பணிக்கு வந்தவுடன் இப்பிரச்சினை சரியாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும் மக்களின் உயிர் காக்கும் சேவை என்பதால் இதில் மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Virudhunagar