ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்.. தேடும் பணி தீவிரம்... 

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்.. தேடும் பணி தீவிரம்... 

X
இளைஞர்களை

இளைஞர்களை தேடும் பணி

Viluppuram District News : தென்பெண்ணையாற்று நீரால் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை தேடும் பணியினை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு, மீட்புப்பணியினை துரிதப்படுத்தினார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தின் வழியாக கடந்தபோது ஆற்று நீரால் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை தேடும் பணியினை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு, மீட்புப்பணியினை துரிதப்படுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், சேத்தூர் பகுதியில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் திருக்கைப்பட்டு கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தினை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்று நீரால் இழுத்துச்செல்லப்பட்டனர்.

திருக்கைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரகு(30), காத்தவராயன்(32) ஆகிய இருவரும் திருவெண்ணெய்நல்லூர் டி.எடையார் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடந்த 12.12.2022 மாலை 6.00 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர்.

இதையும் படிங்க : விழுப்புரம் விவசாயிகளே.. பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் பெறனுமா.. உடனே இதை செய்யுங்க!

அப்போது, கொங்கராயனூர் - அருளவாடி இடையே செல்லும் தரைப்பாலத்தை கடந்தபோது கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் தென்பெண்ணையாற்றில் அதிக அளவில் மழைநீர் சென்றதையொட்டி, இரண்டு இளைஞர்களும் எதிர்பாராதவிதமாக இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

உடனடியாக வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் சார்பில் ஒரு படகு மூலம் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 26 நபர்கள் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மீட்புப்பணியினை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு திண்டிவனத்திலிருந்து 10 நபர்கள் கொண்ட ஒரு குழு படகு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், இளைஞர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து, ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

First published:

Tags: Local News, Vizhupuram