ஹோம் /விழுப்புரம் /

குழந்தைகளுக்கு பிடித்தமான குட்டி குட்டி சொப்பு சாமான்கள் தயாரித்து அசத்தும் விழுப்புரம் இளைஞர்

குழந்தைகளுக்கு பிடித்தமான குட்டி குட்டி சொப்பு சாமான்கள் தயாரித்து அசத்தும் விழுப்புரம் இளைஞர்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே தென் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகள் விரும்பி விளையாடும் சொப்பு சாமான்களை களிமண் மூலம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக பிளாஸ்டிக் அல்லது மரத்தினாலான சொப்பு சாமான்களையே குழந்தைகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதர்கு மாற்றாக களிமண் மூலம் விதவிதமாக தயாரிக்கப்படும் சொப்பு சாமான்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே தென் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மண்பாண்டங்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த முடித்த விக்னேஷ் மண்பாண்ட தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்..

மண்குதிரை, மண்பானைகள் போன்றவற்றை தயாரித்து வந்த விக்னேஷ், புதியதாக வேறு எதையாவது முயற்சிக்கலாமே என யோசித்து தொடங்கியது தான் குழந்தைகளுக்கான சொப்பு பொம்மைகள் தயாரிப்பு..

மேலும் படிக்க: ‘ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் வாழ்க்கை இல்லை.’.. கண்ணீருடன் உதவி கோரும் விழுப்புரம் பெண்

குழந்தைகளுக்கு பிரியமான அடுப்பு , பானை, தண்ணீர் குடிக்கும் கிளாஸ், முறம், அம்மி, வானலி, பாத்திரங்கள், உரல், தோசைக்கல் போன்ற பல சொப்பு சாமான்களை களிமண் மூலம் விக்னேஷ் செய்து வருகிறார். கடந்த 10 வருடங்களாக வீட்டிலேயே பல்வேறு வகையான விளையாட்டு சாமான்களை உற்பத்தி செய்து சென்னை, சேலம், பாண்டிச்சேரி போன்ற பல நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்.

சொப்பு சாமான்கள்

5 ரூபாய் தொடங்கி ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நலிவடைந்து விடாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இவர் இலவசமாக இத்தொழில் பயிற்சியினை அளித்து வருகிறார். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 800 செட் விளையாட்டு சாமான்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற்று வருவதாகவும் விக்னேஷ் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தொழிலுக்கு அடிப்படையான களிமண் எடுப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும், அரசாங்கம் களிமண்ணைஎடுப்பதற்கு பாஸ் வழங்க வேண்டுமெனவும், இது போன்ற கைவினை பொருட்கள் செய்வதற்கு போதிய நிதி உதவியு கிடைக்க வேண்டுமென்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram