ஹோம் /விழுப்புரம் /

நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைக்கு உதவும் விழுப்புரம் இளைஞர்கள்

நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைக்கு உதவும் விழுப்புரம் இளைஞர்கள்

குழந்தைக்கு

குழந்தைக்கு உதவும் இளைஞர்கள்

Viluppuram District News : 22 மாத குழந்தை ரேணுகாவிற்கு நுரையீரலில் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுகள் கவனிக்கும் அளவிற்கு தந்தையின் வருமானம் இல்லாததால் ஒரு பெரிய இளைஞர்கள் பட்டாளமே  உதவ முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                          ?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரிய நகரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி பூங்கொடி.பூபாலன் சைக்கிளில் டீ விற்று தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சிறுவயது முதல் இந்த தொழிலை செய்து வருகிறார் பூபாலன்.

இவர்களுக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் ரேணுகா என்ற பெண் குழந்தை பிறந்தது. சில நாட்களாக குழந்தை விடாமல் அழவே, அவளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் இவர்கள் தலையில் பேரிடி விழுந்தது.

குழந்தைக்கு பல சோதனைகளை எடுத்த மருத்துவர்கள் அவளுக்கு நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பதால் அவளது எடை கூடியவுடன் சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினர். முதலில் கழுத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.. மதுபோதையில் அட்டகாசம்.. விழுப்புரத்தில் சம்பவம்

மேலும் வயிற்று பகுதியில் இரண்டு இன்ச் அளவில் ஒரு துளை போட்டு டியூப் வழியாக உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் ஆரம்ப சோதனைகள் மற்றும் சிறிய அறுவை சிகிச்சைக்கே தங்களிடம் உள்ள சேமிப்பு மற்றும் கைமீறி கடன் வாங்கிவிட்டதாகவும், இதற்கு மேல் தங்களால் எதுவும் முடியாது என்று கதறினர் பெற்றோர்கள்.

குழந்தையின் உணவு மற்றும் மருத்துவ தேவைக்கே ரூபாய் 30,000 மாதம் ஒன்றுக்கு தேவைப்பட்டது. மனதுக்குள் புலம்பிய பெற்றோருக்கு இருட்டில் கிடைத்த ஒளி கீற்றாய் உதவிகள் வர தொடங்கின. விழுப்புரம் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று திரண்டது. தன்னார்வ குழுக்கள் உடன் இணைந்து உதவ முன் வந்தோரிடம் உதவிகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், குழந்தை ரேணுகாவிற்கு காலையில் பால் பழச்சாறு, போன்றவற்றை ட்யூப் வழியாக கொடுத்து உடல் எடையை கூட்ட வேண்டும். இதற்கும் வசதியில்லாத பெற்றோருக்கு அக்கம்பக்கத்தினர் உதவ முன் வந்தனர்.

குழந்தையின் அன்றாட தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை,சென்னையில் உள்ள பிரவீன் குமார் என்ற இளைஞர் உதவியுள்ளார்.

இதையும் படிங்க : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி...

அதேபோல் “நாடொப்பன செய்” மற்றும், ”மனிதம் காப்போம்” என்ற தன்னார்வலர்கள் குழு மற்றும் அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து குழந்தைக்கு தேவையான ரூ.15000 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மளிகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

இந்த உதவிகளை செய்தவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இளைஞர் பட்டாளம் திரண்டால் எதுவும் சாத்தியமே என ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், உதவும் நோக்கம் கொண்ட மனிதநேயம் உள்ள பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் ஜீ பே எண்களுக்கு அவர்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு அக்குழந்தையின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

GPAY - 9578611786

A/c No :273601000018249

Gingee branch

IFSC : IOBA0002736

Indian overseas Bank

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram