ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இளையோர் திருவிழா

விழுப்புரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இளையோர் திருவிழா

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இளையோர் திருவிழா

Viluppuram | விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடத்திலுள்ள நேரு யுவகேந்திரா அலுவலகம் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இளையோர் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் மோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடத்திலுள்ள நேரு யுவகேந்திரா அலுவலகம் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இளையோர் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் மோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவினை மாவட்ட கலெக்டர் மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75வது அமுத பெருவிழாவின் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேரு யுவகேந்திரா சார்பில், கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கைப்பேசி புகைப்படப்போட்டி, பேச்சுப்போட்டி, கலை விழா போட்டி, இளையோர் கலந்துரையாடல் - இந்தியா@2047 என பல்வேறு தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

இதையும் படிங்க : விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

மாவட்ட அளவிலான இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரத்தை சுற்றியுள்ள கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், நேரு யுவகேந்திரா இளையோர் மன்றம் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் முதலாவதாக பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கராத்தே, சிலம்பம், வெஸ்டர்ன் டான்ஸ், கரகாட்டம், ஒயிலாட்டம், மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், நெருப்பு கொண்டு சிலம்பம் சுற்றுவது என அனைத்து போட்டியிலும் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆரவாரமாக இந்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு குழுவிலும் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். மாணவர்களின் திறமைக்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் போடப்பட்டு அதன் அடிப்படையில் வெற்றி வாகை சூடிய மாணவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட இளையோர் அலுவலர், அலுவலக பணியாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram