Home /viluppuram /

உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்வோம்...

உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்வோம்...

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் வாரம் பேரணி

World Breast Feeding Week : தாய்ப்பால் வார விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துண்டு பிரசுரங்கள், வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் முதல் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

தாய்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக  உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் விழுப்புரம்  ஆட்சியர் அலுவலகத்தில் தாய்ப்பால் வாரத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் மகத்துவத்தை முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை கையில் ஏந்தியபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி கூறியதாவது,

விழுப்புரம் மாவட்டத்தில், 1781 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தாய்ப்பால் வார விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தாய்ப்பால் அளிப்பது உயர்த்துவோம்- கற்பிப்போம் ஆதரிப்போம். (Step up for breast feeding : educate and support ) என்ற தலைப்பின் கீழ் குழந்தையின் முதல் 1000 நாட்கள், தாய்ப்பால் தருவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் உள்ள நன்மைகள், குழந்தையின் வளர்ச்சி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு வாரம் நடத்தப்பட இருக்கிறது.


தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் உலக தாய்ப்பால் வார விழா


இந்த தாய்ப்பால் வார விழா   07.08.2022 வரை நடைபெற உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. இதில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பல இளம் பெண்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தாய்ப்பால் குறித்த பல தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுகள் அளிக்கப்பட உள்ளது. தாய்மார்கள் தங்களுக்குரிய கேள்விகளை அங்கன்வாடி ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.   மேலும் இந்த தாய்ப்பால் வார விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துண்டு பிரசுரங்கள், வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் உலக தாய்ப்பால் வார விழா


குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும்.  சீம்பால் தான் குழந்தையின் முதல் நோய்த்தடுப்பு மருந்தாகும். 6 மாதம் முடிந்த உடன் 2 வயது வரை தாய்ப்பாலுடன் கூடுதலாக இணை உணவு வழங்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது போன்று பல்வேறு வழிமுறைகள் தாய்ப்பால் தருவதில் இருக்கிறது.எனவே இந்த வார விழாவை கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அன்பறிவு கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram, World breastfeeding week

அடுத்த செய்தி