Home /viluppuram /

Villupuram : போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, நீதிபதி பங்கேற்பு..

Villupuram : போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, நீதிபதி பங்கேற்பு..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District : விழுப்புரத்தில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று (28.06.2022) விழுப்புரம் போதைப்பொருள் நுண்பிரிவு மூலம்  போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாடல் குறித்த குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இந்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றனர்.

இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

கையில் ஏந்திச் சென்ற விழிப்புணர்வு பதாகைகளில்,

ஒழிப்போம்! ஒழிப்போம்!
கள்ளச்சாராயம் ஒழிப்போம்!

அருந்தாதே! அருந்தாதே!
கள்ளசாராயம் அருந்தாதே!!

Say no to DRUG'S

போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திக் கொண்டு பேரணியாக நடந்து சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை சென்று முடிவடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Drug addiction, Local News, Villupuram

அடுத்த செய்தி