ஹோம் /விழுப்புரம் /

World AIDS Day 2022 : "எய்ட்ஸ் நோயாளிகளை சமமாக நடத்துவோம்” - விழுப்புரத்தில் உறுதிமொழி ஏற்பு

World AIDS Day 2022 : "எய்ட்ஸ் நோயாளிகளை சமமாக நடத்துவோம்” - விழுப்புரத்தில் உறுதிமொழி ஏற்பு

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

பொதுமக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் பாதித்தவர்கள் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் சமூகத்தில் தானும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்திடும் பொருட்டும், அரசால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இதர உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டிசம்பர் 1-ஆம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினமாக டிசம்பர் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட 10948 நபர்கள் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ வசதி தற்போது தேவைப்படுபவர்கள் கண்டறியப்பட்டு அதில் 8983 நபர்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க :  விழுப்புரத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்

மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு இன்று உதவித்தொகை வழங்கப்பட்டன். அதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 23 பேருக்கு, 33 நபர்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும் 27 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், 14 நபர்களுக்கு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ அரிசியும், 2221 நபர்களுக்கு குடும்ப அட்டையும்,26 நபர்களுக்கு தாட்கோ கடன் உதவியும்,4 நபர்களுக்கு தொகுப்பு வீடுகளும், 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும்,20 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரமும் 5 நபர்களுக்கு திருமண உதவித்தொகையும், 245 நபர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், 2 நபர்களுக்கு இரு பெண் குழந்தை கடனுதவி திட்டமும்,5 நபர்களுக்கு தாலிக்கு தங்கமும்,12 திருநங்கையர்களுக்கு உதவித்தொகையும், 2678 நபர்களுக்கு காப்பீடு திட்டம் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை அரவணைப்பதாகவும், அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனவும், சுயமாக ரத்த பரிசோதனை செய்ய முன்வரவேண்டும் என்ற உறுதிமொழியும் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து, எச்.ஐ.விஃஎய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும், வாகனங்களில் எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

First published:

Tags: Local News, Villupuram