முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்..

விழுப்புரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்..

X
மகளிர்

மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்

Women's Day Celebrations : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆண்களை போலவே பெண்களும் பல துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பெண்கள் என்றாலே இந்த வேலைக்கு தான் போக வேண்டும், இதுதான் செய்யவேண்டும் என்ற காலம் போய், பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் அதாவது ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினி துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை.

அப்படிப்பட்ட பெண்களைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ,விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி வரவேற்புரையாற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதியாக பூர்ணிமா தலைமை மற்றும் சிறப்புரை வழங்கினார்.

இதையும் படிங்க : "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

மகளிர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற பணியாளர்களுக்கு வைக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. பெண்கள் தங்கள் தனித்திறமைகளை பாடல் மற்றும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினர். விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் அனைத்து பணியாளர்கள் வழக்கறிஞர் பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

First published:

Tags: Local News, Villupuram