ஹோம் /விழுப்புரம் /

க/பெ. ரணசிங்கம் பட பாணியில் நடந்த துயரம்.. கணவரின் உடலை கொண்டு வர போராடும் மனைவி!

க/பெ. ரணசிங்கம் பட பாணியில் நடந்த துயரம்.. கணவரின் உடலை கொண்டு வர போராடும் மனைவி!

X
Died

Died husband in Dubai.  A wife who struggles to bring her body to vigilance

குழந்தைகளின் காது குத்து விழாவிற்கு புறப்பட்ட நபர், மாரடைப்பால் துபாயிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

துபாயிலிருந்து தனது குழந்தைகளின் காது குத்தும் விழாவிற்கு வருகை புரிய இருந்த கணவர் மாரடைப்பால் இறந்ததால் உடலை விழுப்புரம் கொண்டு வர உதவ வேண்டும் என குழந்தைகளுடன் கண்ணீர் மல்க விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் வசித்து வந்த ஜோசப் தமிழரசன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக துபாய் அபுதாபியில் எமிரேட்ஸ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் ஜெனரல் ஹெல்பராக பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது குழந்தைகளின் காது குத்தும் விழாவிற்கு குவைத்திலிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்ப ஆயத்தமானார். தந்தை வருவார் என்ற மகிழ்ச்சியில் குழந்தைகளும் எதிர்பார்ப்பில் மனைவியும் இருக்க திடீரென பேரிடியாய் ஒரு அழைப்பு ஒன்று வந்தது.

தாயகம் திரும்ப இருந்த கணவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஏற்பட்டு இறந்து விட்டதாக அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மனைவி ஏழிலரசிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.

ஆற்றாத பெருந்துயரில் ஆழ்ந்த மனைவி கணவர் உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று என கோரி அவரது மனைவி எழிலரசி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானுக்கு இந்த கடிதத்தை பரிந்துரை செய்து விரைந்து உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சோகத்தில் மூழ்கியது.

First published:

Tags: Dead body, Local News, Viluppuram S22p13