ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம்: நவராத்திரி கொலு வைத்து வழிபடுவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்...

விழுப்புரம்: நவராத்திரி கொலு வைத்து வழிபடுவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்...

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் நவராத்திரி கொலு வழிபாடு...

Villupuram Navarathri 2022 | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான வீடுகளிலும் நவராத்திரியையொட்டி, கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

முப்பெரும் தேவியரை வணங்கும் வகையில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்து மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, கோயில்கள், வீடுகள், நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

அதுபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான வீடுகளிலும் நவராத்திரியையொட்டி, கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைக்கும்போது 5, 7, 9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். 9 படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மேலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் என அனைவரும் நவராத்திரி கொலு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க:  விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

விழுப்புரம் குழந்தைவேல் நகரின் ஒரு வீட்டில், கொலு பொம்மைகளை வைத்து வழிப்பட்டு வந்தனர். உள்ளே சென்று பார்த்தால், பெண்கள் குழுவாக அமர்ந்து கொலுவை வழிபட்டு கொண்டிருந்தனர். கொலு பற்றியும் அதன் வழிபாடு குறித்தும் அங்குள்ள பெண்மணிகளிடம் கேட்டபோது, சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி என்பது போல, சக்திக்கு உகந்த நாள் நவராத்திரியாகும் என்றனர்.

இந்த நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் நாம் வழிபடுவோம். புராண காலங்களில் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக 9 நாட்கள் விரதம் இருந்து தன்னுடைய சக்தியை வளர்த்துக்கொண்டு, அதன்பின் அந்த அரக்கனை அழித்து மக்களையும் தேவர்களையும் காப்பாற்றியதாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க:  இயற்கை விவசாயத்தில் இப்படியும் லாபம் பார்க்கலாமே..!

இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாள் துர்க்கைக்கும் அடுத்த மூன்று நாள் லட்சுமிக்கும், அடுத்த நாள் சரஸ்வதிக்கும் பூஜை செய்து வழிபட்டு வருவோம். இதுபோன்று, கொலு வைத்து வழிபடுவதன் நோக்கமே, துர்க்கை போல் நமக்கு சக்தியும் தைரியமும், லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் செல்வ வளமும், சரஸ்வதி வழிபடுவதால் நல்ல ஞானமும் கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அக்கம் பக்கம் இருக்கிற அனைத்து பெண்மணிகளும் வீட்டுக்கு அழைத்து, ஒன்றாக பூஜை செய்து அவர்களுக்கு பிரசாதமாக வெற்றிலை பாக்கு மற்றும் மஞ்சள் கயிறு போன்றவற்றை கொடுத்து, தீர்க்க சுமங்கலியாக இருக்க கடவுளுடைய அனுக்கிரகம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

மேலும் சக்தி தேவியை வழிபடுவதற்காக சிறப்பு பாடல்களையும் நாங்கள் பாடுவோம். இவ்வளவு நன்மைகள் அடங்கிய வழிபாடுதான் கொலு வழிபாடாகும்" என கூறினார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கொலு பொம்மை அடிக்க வைப்பதின் மூலம் பெண்களுக்கு கற்பனைத் திறன் கூடுகிறது. இளைய தலைமுறையினருக்கும் நவராத்திரி சிறப்பு பூஜை பற்றி தெரிவதற்கு உகந்த நாளாகும் எனக் கூறினார்கள்.

Published by:Arun
First published:

Tags: Local News, Navarathri, Villupuram