முகப்பு /விழுப்புரம் /

மஞ்சள் அறுவடை பணியின்போது மாஸ் காட்டிய நன்னாடு பெண்கள்..

மஞ்சள் அறுவடை பணியின்போது மாஸ் காட்டிய நன்னாடு பெண்கள்..

X
விழுப்புரம்

விழுப்புரம்

Women Farmers : விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அருகே ஆலத்தூர் கிராமத்தில் விவசாய வேலையில் ஈடுபடும் பெண்கள் வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்தது காண்போரை மகிழ்சியில் திளைக்கவைத்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அருகே ஆலத்தூர் கிராமத்தில், விவசாய வேலையில் ஈடுபடும் பெண்கள் வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்தது காண்போரை மகிழ்சியில் திளைக்க வைத்தது. நமது நாட்டில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. விவசாயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை இயந்திரங்கள் இல்லாமல் மனிதர்களே பெரும்பாலான வேலைகளை செய்து வருகின்றனர். வேலை நேரத்தில் வேலை களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்கள் உதவுகின்றன.

அந்தவகையில் இந்த நாட்டுப்புற பாடல்கள் உழவர்களின் மனச்சோர்வை அகற்றுவதாகவும், உடல் உழைப்பினால் ஏற்படக்கூடிய வலியையும் போக்குவதாகவும் அமைந்துள்ளது. உழவுத்தொழிலில் நடவு, களை எடுத்தல் போன்ற வேலைகளில் விவசாயிகள் ஈடுபடும்போது இந்த நாட்டுப்புற பாடல்களை அவர்கள் பாடுவது வழக்கம்.

அந்த வகையில் விழுப்புரம் நன்னாடு அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் விவசாயிகள் மஞ்சளை அறுவடையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் இனிமையான பழைய எம்.ஜி.ஆர் பாடல்கள்களை பாடிக்கொண்டே வேலை செய்தனர். இதுபோன்ற செயல்கள் தற்போது பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. முந்தைய காலத்தில் அனைவருமே களைப்பு தெரியாமல் இருப்பதற்கு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்வார்கள். ஆனால் தற்போது ஒரு சில கிராமங்களில் உள்ள மக்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Agriculture, Local News, Villupuram