விழுப்புரம் டூ மாம்பழப்பட்டு சாலையில் உள்ளது இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம். கிராம மக்களுக்கு பல்வேறு சுயதொழில் குறித்த பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த மாதத்தில் பேப்பர் பேக் தயாரிப்பு வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேப்பர் பேக் தயாரிப்பு வகுப்பில்,31 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். சணல் பை உடன் வாழை மட்டை சேர்ந்து பேப்பர் பேக் செய்வது, செய்தித்தாள்களை கொண்டு கூடை செய்வது, ஷாப்பிங் பேக் தாம்பூல பேக், லேப்டாப் பேக், போன்ற பல வகைகளில் பேப்பர் பேக் தயாரிப்பதற்கு பயிற்சி வகுப்புகளை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அளிக்கிறது.
2019ம் ஆண்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுக்கு தடை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை தேடுவதில் மக்கள் கவனம் செலுத்தினர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத துணி பைகள், காகிதப் பைகள் மற்றும் சணல் பைகள் சந்தையில் தேடு பொருளாக மாறின.
அதை சரியாக பயன்படுத்திய சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர், இந்தியன் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பை தயாரிப்பில் தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்து எளிமையாக செய்யக்கூடிய வேலை என்பதாலும் போதிய வருவாய் வருவதாலும் பெண்கள் ஆர்வத்துடன் செயல்பட்டனர்.
பேப்பர் பேக் தயாரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டு வெற்றிகரமாக சந்தைபடுத்தும் ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்ராஜ், என்பவரை பயிற்சியாளராக வரவழைத்து, பேப்பர் பேக் தயாரிப்பு குறித்து கற்றுதரப்படுகிறது.
இவர் 11 வருடங்களாக பேப்பர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அது மட்டுமல்லாமல் பல நிறுவனங்களில் பயிற்சியும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து பயிற்சியாளர் கார்த்திக் ராஜா கூறுகையில், “அனைவரும் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது பேப்பர் பேக்குக்கு நல்ல முக்கியத்துவம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஒரு பேப்பர் பேக் இரண்டு கிலோ வரை தாங்கும் அளவிற்கு தயாரிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு பிளாஸ்டிக் ஒழித்து, பேப்பர் பேக் தர வேண்டும் என்பதே பயிற்சி வகுப்பின் முக்கிய நோக்கம் ஆகும்” என கூறினார்.
மேலும், “பயிற்சி பெறும் பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களை வருமானத்திற்காக சார்ந்து இல்லாமல் அவர்களால் தங்கள் சொந்த காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : விழுப்புரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு... ரூ.15,000 சம்பளம் 108 ஆம்புலன்சில் வேலை
அதுமட்டுமல்லாமல் சுயதொழில் மேற்கொள்வதற்கு கடன் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவதால் இது போன்ற பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது” என கார்த்திக் ராஜ் தெரிவித்தார்.
இதுபோன்ற பயிற்சிகள் பெற விருப்பமுள்ள நபர்கள், விழுப்புரம் அலமேலு புரத்தில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அனுகி விருப்பமுள்ள வகுப்புகளில் சேர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் தொடர்பு கொள்வதற்கு, அனிதா, இந்தியன் வங்கி, சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மேலாளர்,
இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், NO:5, அலமேலுபுரம், மாம்பழப்பட்டு சாலை, விழுப்புரம் மாவட்டம் 605755, தொடர்பு எண் :04146-294115, 7598466681.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram