முகப்பு /விழுப்புரம் /

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதா விழுப்புரம் சரவணப்பாக்கம் அம்மா பூங்கா?

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதா விழுப்புரம் சரவணப்பாக்கம் அம்மா பூங்கா?

X
சரவணப்பாக்கம்

சரவணப்பாக்கம் அம்மா பூங்கா

Amma park | விழுப்புரம் மாவட்டம் சரவணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் சரவணப்பாக்கம் ஊராட்சியில் மிகவும் மோசமான நிலையில், பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை பாதுகாத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்காவுக்கு உட்பட்டது சரவணப்பாக்கம் ஊராட்சி. இந்த பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் சிறுவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அம்மா பூங்காவிற்கு 10 லட்சமும் அதனுள் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி நிலையத்திற்கு 10 லட்சம் என 20 லட்சம் மதிப்பீட்டில் இவை அமைக்கப்பட்டன.

இந்த பூங்கா அமைக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த பூங்காவில் வாயிற் கதவை உடைத்து விட்டு சமூக விரோதிகள் சிலர் பூங்காவினை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த அம்மா உடற்பயிற்சி கூடத்தில் இருந்த அனைத்து உபகரணங்களும் தற்போது துருப்பிடித்து காணப்படுவதாகவும், இந்த பூங்காவனது தற்போது மாட்டு கொட்டையாக சிலர் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த இடத்தை சமூகவிரோதிகள் சீட்டு விளையாடுவதற்கும் மது அருந்துவதற்கும் இன்ன பல சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பூங்காவை மறுசீரமைப்பு செய்து இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Park, Viluppuram S22p13