Home /viluppuram /

‘ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் வாழ்க்கை இல்லை.’.. கண்ணீருடன் உதவி கோரும் விழுப்புரம் பெண்

‘ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் வாழ்க்கை இல்லை.’.. கண்ணீருடன் உதவி கோரும் விழுப்புரம் பெண்

விழுப்புரம்:

விழுப்புரம்: காதல் மனைவிக்காக கணவரின் போராட்டம்..

Villupuram District Latest News | ஆக்சிஜன் சிலிண்டர்  இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று ‘வாழ்வா சாவா’ நிலையில் உள்ள தனது மனைவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று ‘வாழ்வா சாவா’ நிலையில் உள்ள தனது மனைவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர்.

விழுப்புரம் அருகே சித்தேரிக்கரை பகுதியில், கமால் பாஷா( 32), தேவி (32) தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். கமால்பாஷா கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில் அவரின் மனைவி தேவி வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

இதனிடையே திருமணமாகி 5 வருடங்கள் கழித்து தேவியின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது. தொடக்கத்தில் அவராகவே மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார், பின்னர் உடல்நிலை மிகவும் மோசமாக செல்வதை உணர்ந்த தேவி, கமால் பாஷாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:  மானியத்துடன் காளான் வளர்ப்பு.. வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வருமானம்.. விழுப்புரம் நபரின் அசத்தல் பிசினஸ்..

உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் விழுப்புரம் பொது மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்ததில் தேவிக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேவி அங்கு சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே தேவிக்கு நுரையீரல் தொற்றும் அதிகரித்து உடல்நிலையை மோசமாக்கியிருக்கிறது.

தனது மனைவி தேவியின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளும் பொருட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை கமால் பாஷாவிற்கு ஏற்படவே அக்கம்பக்கத்தில் பணத்தை கடனாக பெற்று தனது மனைவியின் சிகிச்சை செலவுகளையும், குடும்ப செலவுகளையும் கமால் பாஷா கவனித்து வருகிறார். தற்போது தேவி செயற்கை சுவாசத்தின் உதவியுடன் மட்டுமே உயிர் வாழ்ந்து வருகிறார். தினமும் அவருக்கு இரண்டு சிலிண்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

இதனிடையே, ஜிப்மர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது மீண்டும் சென்னைக்கு சென்று சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை செலவுக்கு கூட பணமில்லாமல் கமால் பாஷா திண்டாடி வருகிறார். ஒரு நாளைக்கு இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்து மாத்திரைகள் என தேவிக்கு மட்டும் ஆயிரம் முதல் 2,000 ரூபாய் செலவாகிறது. கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலையில் மனைவிக்கு உறுதுணையாக இருந்து வரும் கமால் பாஷா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறார்.

தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து உதவ வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.

இதுபற்றி கமால் பாஷாவிடம் பேசியபோது,

“மனைவியின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் அவரால் உயிர் வாழ முடியாது என்ற நிலையி எனக்கும் ஒரு மாதமாக குடல்வால் அழற்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் என்னை நம்பி வீட்டில் எனது தாயாரும், தந்தையும் இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தினர் உறவினர்களிடம் என முடிந்த அளவிற்கு உதவி கேட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

என் மனைவியின் சிகிச்சைக்கு மாவட்ட நிர்வாகம் உதவினால் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவி கூறுகையில், ”என் குடும்பம் வறுமையின் பிடியில் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசாங்கத்தை தவிர எங்களுக்கு உதவ யாரும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் சூழல் கருதி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இத்தம்பதியருக்கு உதவ நினைப்போர் 9791342138 என்ற எண்ணில் கமால் பாஷாவை தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி