முகப்பு /விழுப்புரம் /

கீழ்பெரும்பாக்கத்தில் விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா!

கீழ்பெரும்பாக்கத்தில் விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா!

X
திரௌபதி

திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா

Villupuram News | விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 473-ம் ஆண்டாக நடைபெறும் இந்த தீமிதி விழா உற்சவம் கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று முதல் 30-ந்தேதி வரை எருமணந்தாங்கல், பொய்யாப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம் பாளையம், நாப்பாளையம் தெரு, காகுப்பம் உள்ளிட்ட 9 பகுதிகளை சேர்ந்த மக்கள் உபயதாரர்களாக முன்நின்று உற்சவத்தை தினமும் வெகு சிறப்பாக நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தீமிதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகத்தை பக்தர்கள் தூக்கி கொண்டு, தீ மிதித்தையடுத்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த, தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் இறங்கி, தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Villupuram