Home /viluppuram /

முன்னாள் படை வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - விழுப்புரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - விழுப்புரம் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

VILLUPURAM : மொபைல் போன் பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரிசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் வழங்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் கீழ்காணும் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் விற்பனை

இதில், மொபைல் போன் பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரிசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் கார் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தகைய பயிற்சிபெற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் வரும் 14ஆம் தேதிக்குள் பெயரினை விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி