ஹோம் /விழுப்புரம் /

விரால் மீன் வளர்ப்பில் ₹1.2 லட்சம் வருமானம்.. இது போல செய்தால் நஷ்டம் கிடையாது, லாபம் நிச்சயம்..

விரால் மீன் வளர்ப்பில் ₹1.2 லட்சம் வருமானம்.. இது போல செய்தால் நஷ்டம் கிடையாது, லாபம் நிச்சயம்..

விழுப்புரம்

விழுப்புரம் விரால் மீன் வளர்ப்பு

Profittable Murrel Fish Farming | விழுப்புரம் அருகே  ‘ஒரு கோடி’ கிராமத்தை சேர்ந்த சுந்தர்(39)   டிப்ளமோ படித்து முடித்துள்ளார். மீன் வளர்ப்பில் நல்ல லாபம் பார்க்க முடியும் என ஆராய்ந்து தற்போது மீன் வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அருகே 'ஒரு கோடி' கிராமத்தை சேர்ந்த சுந்தர்  விரால் மீன் வளர்ப்பில் களமிறங்கி தற்போது அதில் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

விழுப்புரம் அருகே  ‘ஒரு கோடி’ கிராமத்தை சேர்ந்த சுந்தர்(39)   டிப்ளமோ படித்து முடித்துள்ளார். மீன் வளர்ப்பில் நல்ல லாபம் பார்க்க முடியும் என ஆராய்ந்து தற்போது மீன் வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளார்.

மீன் வளர்ப்பு குறித்த பல சுவாரசியமான விஷயங்களை நம்மிடம் பகிர ஆரம்பித்தார் அவர்..

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

நஷ்டம் ஏற்படாமல் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் மீன் பண்ணை வளர்ப்பும் ஒன்றாக உள்ளது. நல்ல பராமரிப்பு இருந்தால் மீன் வளர்ப்பில் லாபம் பார்க்க முடியும். அதில் குறிப்பாக விரால் மீன் வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடியதாகும். விரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்க வேண்டும் என்று இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம்.

மீன் பண்ணைக்குட்டையில் சுந்தர்

முதலீடு:

விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். மொத்தமாக மூன்று குட்டையில் விரால், ஏரி வவ்வா, ஜிலேபி, கெண்டை, கட்லா, புல் கெண்டை, மிருகால் உள்ளிட்ட பல ரக மீன்களை குட்டையில் வளர்த்து வருகிறார். மீன் வளர்ப்பிற்கு முதலீடாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். மீன் வாங்குதல் குளம் வெட்டுதல் போன்ற செலவுகள்.

மீன் பண்ணைக்குட்டையில் சுந்தர்

குளங்களின் அளவு:

ஒவ்வொரு குளமும் ஒவ்வொரு அளவு கொண்டதாகும்.30×60, 20×60, 17×60 போன்ற அளவில் ஒவ்வொரு குளமும் வெட்டப்பட்டுள்ளது. குளம் வெட்டியவுடன் ஒரு அடி ஆழத்தில் சுண்ணாம்பு தண்ணீரை நிரப்ப வேண்டும். அதன்பின் 2 நாட்கள் கழித்து, நான்கடியில் தண்ணீரை ஏற்ற வேண்டும். சாணத்தைக் கொண்டு கரைக்க வேண்டும். சாணம் கலந்த 15 நாட்களுக்குப் பிறகு தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும், பச்சை நிறத்தில் மாறிய குளம் மீன் வளர்ப்பிற்கு ஏற்ற குளமாக இருக்கும்.

மேலும் படிக்க:  மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

தீவன விவரம்:

விரால் மீன் வளர்ப்பிற்கு தீனியாக முதலில் ஆயம் ஜிலேபி கெண்டைகள் 150 குளத்தில் விடப்படும். அதன் பின் ஒரே வயதுடைய 1000 விரால் மீன்கள் விடப்பட்டுள்ளது. விரால் மீனுக்கு தீனியாக ஜிலேபி கெண்டைகள் போடும் குஞ்சுகள் இருக்கும். அதன்பின், கச்ச கருவாடு பழக்கப்படுத்தி இருக்கிறோம். இரண்டு தான் விரால் மீனுக்கு தீனியாக அமைகிறது.

மீன் பண்ணைக்குட்டை

பூச்சித்தொற்றுகள் ஏதேனும் இருந்தால் மஞ்சள் தூள் உப்பு சேர்ந்த கரைசலை கொண்டு குளத்தில் தெளித்து வந்தால் நோய் தாக்குதல் இன்றி மீன்கள் வளரும். மீன் விடப்பட்ட 10 மாதம் கழித்து பதினோராம் மாதத்தில் விரால் மீன் நல்ல எடை கொண்டு வளர்ந்திருக்கும். ஒவ்வொரு மீனும் குறைந்தபட்சம் முக்கால் கிலோவில் இருந்து ஒரு கிலோ வரை இருக்கும்.

மேலும் படிக்க:  வெறும் கால்களில் நடக்கும் அந்தமான் கிராம மக்கள்.. குண்டும் குழியுமான சாலையால் கடும் அவதி..

லாப கணக்கு:

ஒரு வருடத்தில் குட்டையில் விடப்பட்ட விரால் மீனிலிருந்து பாதி மீன்களை எடுத்து விற்றால் கூட நல்ல லாபம் பார்க்க முடியும். ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. எனவே நோய் தாக்குதல் இல்லாமல் நல்ல பராமரிப்பவுடன் விரால் மீனை வளர்த்து விற்றால் ஒரு வருடத்தில் 2 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும். நான் குட்டையில் இருந்து பிடிக்கும் மீன்களை விற்பனை செய்து வருகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே மீன் வளர்க்க நினைக்கும் நபர்கள் நிச்சயமாக விரால் மீனை எடுத்து வளர்த்தால் நல்ல லாபம் பார்க்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் சுந்தர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram