Home /viluppuram /

காகிதகூழ் விநாயகர் சிலைகள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.. 

காகிதகூழ் விநாயகர் சிலைகள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.. 

விழுப்புரம்

விழுப்புரம் - விநாயகர் சிலை தயாரிப்பு

Vinayakar Chadurthi : விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டி, அகரம் அரசூர், அங்கு செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குடும்பங்களை சார்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரத்தில் காகித கூழ் விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அதிகளவு ஆர்டர்கள் கிடைப்பதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும், பெரிய விநாயகர் சிலைகள் வீதிகளில் வைத்து வழிபட தடை செய்யப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், வரும்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகின்றனர்.


காகிதகூழ் மூலம் தயாராகும் விநாயகர் சிலைகள்..


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஊர்வலத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால்,விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டி, அகரம் அரசூர், அங்கு செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குடும்பங்களை சார்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.


காகிதகூழ் மூலம் தயாராகும் விநாயகர் சிலைகள்..


விநாயகர் சதுர்த்திக்கு 20 நாட்களே உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளதால் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த இரண்டு வருடமாக விநாயகர் சிலை செய்ய ஆர்டர் இல்லாமல் தொழில் நலிவடைந்து, வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் இந்த வருடம் வரக்கூடிய ஆர்டர்கள் மூலமாக தான் வாங்கிய கடனை கட்ட வேண்டி உள்ளதாகவும், விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு நிதியே தங்களுக்கு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram, Vinayakar rally

அடுத்த செய்தி