முகப்பு /விழுப்புரம் /

கருப்பு காளி.. ரத்த காளி.. பச்சை காளி; மயானக்கொள்ளை திருவிழாவால் ஸ்தம்பித்த விழுப்புரம்..!

கருப்பு காளி.. ரத்த காளி.. பச்சை காளி; மயானக்கொள்ளை திருவிழாவால் ஸ்தம்பித்த விழுப்புரம்..!

X
திருவிழாவில்

திருவிழாவில் ஆடி வந்த காளிகள்

Villupuram Mayana Kollai Festival 2023 | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரேமஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள அம்மன் கோவிலில் அமாவாசை அன்று மயானக்கொள்ளை கொண்டாடப்படும். அதுபோல் தமிழகம் முழுவதும் அங்காளம்மன் கோயில் சார்பில் மயான கொள்ளை திருவிழா நடைபெறும். இத்திருவிழா பருவத ராஜகுல சமுதாயத்தின் சார்பில் நடைபெறுகிறது.

அதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரேமஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அங்காளம்மன் மீது பக்தி கொண்ட பக்தர்கள் அம்மனின் ஆக்ரோஷமான படைப்புகளை வேடமணிந்து, நடனமாடியும் வாயில் உயிருள்ள கோழிகளை கடித்தும், எம். ஜி.ரோட்டில் தொடங்கி மேளதாளங்கள் முழங்க நடனமாடிக் கொண்டே பக்தர்கள் மயானத்தை வந்து அடைந்தனர்.

விழுப்புரம் நகரமே மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்து நின்றது. மேலும்விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு விளைவித்த தானியங்களையும்,

நாணயங்களையும், கொழுக்கட்டை காய்கறிகள் பழ வகைகள் உள்ளிட்டவைகளை மயானத்தில் படைத்து பின்பு பக்தர்கள் மீது வாரி இறைப்பர்.

இந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற நோக்கில் பக்தர்கள் ஏராளமானோர் கொள்ளையிடப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர். மேலும் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆக்ரோஷமாக நடனமாடி மயானத்துக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

First published:

Tags: Festival, Local News, Villupuram, Viluppuram S22p13