Home /viluppuram /

விழுப்புரம் -  பாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா? குமுறலில் வாகன ஓட்டிகள்

விழுப்புரம் -  பாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா? குமுறலில் வாகன ஓட்டிகள்

விழுப்புரம்

விழுப்புரம் -  பாண்டி சாலை

Villupura, - Puducherry Highway | விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., தூர தேசிய நெடுஞ்சாலையை (45ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற, ரூ. 6,431 கோடி மதிப்பீட்டிற்கு பணிகள் நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம்நாகப்பட்டினம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால், கெங்கராம்பாளையம் முதல் கண்டமங்கலம் வரையிலான பகுதி இணைப்பு சாலைகள் முழுவதும் புழுதி மண்டலமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., தூர தேசிய நெடுஞ்சாலையை (45ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற, ரூ. 6,431 கோடி மதிப்பீட்டிற்கு பணிகள் நடந்து வருகிறது.

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் துவங்கி கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, கண்டமங்கலம், எம்.என்.குப்பம் வரை ஒரு பகுதி, அங்கிருந்து சோரியாங்குப்பம், திருவந்திபுரம் வழியாக காரைக்காடு வரைக்கும் 2வது பகுதியும், காரைக்காட்டில் இருந்து சிதம்பரம் புறவழிச்சாலை வரையிலும் 3வது பகுதியாகவும், சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை என 4 பகுதியாக பிரித்து நெடுஞ்சாலை பணிகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், புதுச்சேரியில் 14 கிராமம், கடலூரில் 61 கிராமம், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் உள்ளது. பல்வேறு கிராமங்களை விட்டு கிராமங்களுக்கு செல்பவர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டும் .

இக்கிராம மக்களுக்கு இதுவே பிரதான சாலையாக விளங்குகிறது.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம் ரயில்வே கேட், அரியூர் ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை பணி மேற்கொள்ளும்போது, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவது வழக்கம் தான். இருப்பினும் இந்த நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் தற்போது அவதி அடைகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கெங்கராம்பாளையத்தில் இருந்து எம்.என்.குப்பம் வரை ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக ஆங்காங்கே போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலை மற்றும் மண் கொட்டி இணைத்துள்ள இணைப்பு சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கற்கள் நிறைந்து கிடக்கும் இச்சாலையை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் மற்றும் பழுதாகிவிடுகிறது.

ஆங்காங்கே மண் சாலைகள், சிமெண்ட் சாலைகள், சில பகுதிகளில் ஜல்லிகள் கற்கள் நிறைந்த சாலைகள் என இவ்வழி முழுவதுமே பெரும் பிரச்சினையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் , இந்த சாலையில் கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால், இணைப்பு சாலை பகுதி குண்டும் குழியுமாக மாறி விடுகிறது. மேலும் பணிகள் முடிக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் ஆங்காங்கே மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் சிமெண்ட் சாலையோரம் குவிந்துள்ள மண் காற்றில் பறந்து புழுதி புயலாக மாறிவிடுவதால், வாகன ஒட்டிகள் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

அடிக்கடி கனரக வாகனங்கள் பேருந்துகள் செல்வதால் வீசும் காற்றில் தூசி மண் கலந்த புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மண் கலந்த தூசி கண்ணில் படுவதால் சில நேரங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது. புழுதி கலந்த காற்றை சுவாசிப்பதன் மூச்சு திணறல், இருமல், போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறோம் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சுற்றுப்புற வீடுகளிலும் தூசி படிந்து இதே பிரச்சினைதான் இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த கெங்கராம்பாளையம் முதல் கண்டமங்கலம் வரையிலான பகுதி இணைப்பு சாலைகளான நான்கு வழி சாலையின் பணிகளை முடிந்த அளவிற்கு துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அச்சாலையில் காலை மாலை இருவேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே போடப்பட்ட சிமெண்ட் சாலையின் மேல் உள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் அப்பகுதி மக்கள் மாவட்டத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Puducherry, Villupuram

அடுத்த செய்தி