Home /viluppuram /

வாடிக்கையாளர்களை சுண்டியிழுக்கும் விழுப்புரம் மகேஸ்வரி அக்கா டிபன் கடை..

வாடிக்கையாளர்களை சுண்டியிழுக்கும் விழுப்புரம் மகேஸ்வரி அக்கா டிபன் கடை..

மகேஸ்வரி

மகேஸ்வரி அக்கா டிபன் கடை, விழுப்புரம்

Villupuram Special Food : விழுப்புரத்தில் போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு இடத்தில் மட்டும் காலையிலும், இரவு நேரங்களிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடியும்.  அந்த மக்கள் கூட்டம் மகேஸ்வரி அக்காவின் கடையை தினந்தோறும் நாடி வரும் வாடிக்கையாளர்களே..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்டம் குளம் அருகே  சாலை ஓரத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார் மகேஸ்வரி அக்கா. இங்கு ருசியான இட்லி, பல வகையான தோசைகள் மட்டுமல்லாது, பரிமாறப்படும் சட்னி வகையறாக்களும் சுவையாக இருப்பதால் இந்த கடையை தேடி வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகின்றனர். 

பூந்தோட்டம் குளம் அருகே கடந்த 6 வருடங்களுக்கு மேலாக  இந்த சாலையோர  டிபன் கடை இயங்கி வருகிறது .  போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு இடத்தில் மட்டும் காலையிலும், இரவு நேரங்களிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடியும்.  அந்த மக்கள் கூட்டம் மகேஸ்வரி அக்காவின் கடையை தினந்தோறும் நாடி வரும் வாடிக்கையாளர்களே..

உள்ளூர் அளவில் பிரபலமான இக்கடையை பற்றி அதன் உரிமையாளரான மகேஸ்வரியிடம் பேசினோம்.. 

எனக்கு திருமணமாகி 25 வருடமாக டிபன் கடைதான் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு 4 பெண்கள் பிள்ளைகள். என் கணவர் இறந்து 15 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.  பிள்ளைகளை கரையேற்ற வேண்டும் என்பதற்காக முதலில், அக்கம்பக்கத்தினருக்கு சமைத்து தந்தேன்.  என்  வீட்டிலேயே டிபன் வகையறாக்களை சமைத்து கொடுத்தேன். பின்னர் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கியதால், அந்த நம்பிக்கையில், வீட்டை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் கடை வைத்தேன்.

மகேஸ்வரி அக்கா டிபன் கடை, விழுப்புரம்


முதலில் நஷ்டம் தான் கிடைத்தது. பின்பு சுவை பிடித்துப்போக,   நாள் தவறாமல் தினமும் என் கடையை தேடிவர தொடங்கினார்கள் .

இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் வகைகளுக்கு  தேங்காய் சட்னி, கார சட்னி, பொடி, சாம்பார் என அனைத்தும் உண்டு. இவை அனைத்தும் வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு வருவேன். 4 இட்லி , 1 வடை 30 ரூபாய்க்கும், ஒரு முட்டை தோசை 25 ரூபாய்க்கும், ஒரு செட் சப்பாத்தி 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 இட்லிக்கு மேல் விற்பனையாகிறது.

இங்கு தோசைக்கு வைக்கப்படும் பொடி, கார சட்னி சுவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சில நாட்கள் இட்லி சீக்கிரமாகவே தீர்ந்து போய்விடும். வாடிக்கையாளர்கள் கடை திறக்கும் வரை காத்திருந்து சாப்பிட்டுச் செல்வார்கள்.

மகேஸ்வரி அக்கா டிபன் கடை, விழுப்புரம்


மேலும் பள்ளிக்கூடம், மருத்துவமனை பக்கத்தில் இருப்பதால் பொதுமக்கள் என் கடையை நாடி வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்க முடிகிறது.

கடைக்கு வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் உங்க கடையின் கார சட்னி, பொடி நல்லா இருக்கிறது என  சொல்லும் போது, திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  காலையில் 6:30 முதல் 11.00 மணி வரையும், மாலை 6:30 மணி முதல் இரவு 11.00 வரையும் கடை இயங்கிவருகிறது .

மகேஸ்வரி அக்கா டிபன் கடை, விழுப்புரம்


சாலையோர கடை என்றாலும் சுவையின் தன்மை தரம் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் நாங்கள் தினமும் வந்து சாப்பிட்டு செல்கிறோம் என வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அம்மா பூந்தோட்டம் குளம் அருகே வந்தால் எங்க டிபன் கடையில் உள்ள உணவை சுவைத்து பார்த்துவிட்டு போங்க என்கிறார் மகேஸ்வரி அக்கா. வீட்டு விசேஷத்திற்கும் ஆர்டர் கொடுக்கலாம்.  (தொடர்புக்கு: 8825655957) 
Published by:Arun
First published:

Tags: Food, Local News, Villupuram

அடுத்த செய்தி