முகப்பு /விழுப்புரம் /

இளமைக்கால ஞாபகங்களை பகிர்ந்த 60-ஸ் கிட்ஸ்.. விழுப்புரம் மாம்பழப்பட்டு பள்ளியில் ரீயூனியன்..

இளமைக்கால ஞாபகங்களை பகிர்ந்த 60-ஸ் கிட்ஸ்.. விழுப்புரம் மாம்பழப்பட்டு பள்ளியில் ரீயூனியன்..

X
மாம்பழப்பட்டு

மாம்பழப்பட்டு பள்ளி

Mampazhapattu Govt School | விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976-77ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர் சந்திப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976-77ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர் சந்திப்பு மாம்பழப்பட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு மின்விசிறிகள், நாற்காலிகள், மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், உள்ளிட்ட 50,000ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கு செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காணை ஊராட்சி ஒன்றிய தலைவர் கலைச்செல்வி பேசியபோது,“இந்த பள்ளியில் தமிழில் படித்த மாணவர்கள் இப்போது பல்வேறு அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர்.

அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் நம்முடைய முதலமைச்சரும் தமிழின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே தாய்மொழியாகிய தமிழில் பாடங்கள் கற்பதை நாம் பெருமையாக கொள்வோம்.” என்றார். மேலும், இந்த சந்திப்பு குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ”அனைவரையும் இங்கு சந்தித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அனைவரும் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களுடைய பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.” என்று தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

First published:

Tags: Local News, Villupuram