விழுப்புரம் மாவட்டம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி +2 படித்து முடித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் படத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
அத்துடன், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், மாணவி பிருந்தா அரசு பள்ளிகள் அளவில் 200க்கு 200 கட்ஆஃப் எடுத்து தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பொது பிரிவில் 35வதுஇடம் பிடித்துள்ளார்.
சாதனை மேல் சாதனை படைத்து விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமைதேடி தந்துள்ள மாணவி பிருந்தா கூறியதாவது, “கொரோனா காரணமாக பிளஸ் 1 ஆல்பாஸ் செய்திருந்தாலும், உறைவிட பள்ளியில் பிளஸ் 1 பாட திட்டங்களும், பிளஸ் 2 பாட திட்டம் மற்றும் என்.சி.ஆர்.டி. பாட திட்டங்களையும் சேர்த்து பாடங்கள் நடத்தினர். காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆசிரியர்கள் எங்களுடன் இருந்து பயிற்சி கொடுத்ததால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது.
என் தந்தை கடந்த 2016ம் ஆண்டு விபத்தில் இறந்து விட்டார், தாயார் விஜயலட்சுமி பால் சொசைட்டியில் வேலை செய்றாங்க. எனக்கு 2 அக்கா இருக்காங்க. நாங்க அப்பப்போ துணிகள் தைச்சு கொடுத்து செலவை ஈடுகட்டுவோம்.
அம்மா வர வருமானத்த குடும்பத்தையும்,எங்க மூனு பேரையும் நல்லா படிக்க வச்சாங்க. இப்போ அம்மா பட்ட கஷ்டத்துக்கலாம் நான் நல்ல மதிப்பெண் எடுத்து இருக்கேன். இந்த வெற்றி என் அம்மாவுக்கும், ஆசிரியர்களுக்கும் தான் சேரும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாணவர்கள் படிக்கும் காலத்தில் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்தால் போதும் தானாகவே படிப்பு வரும் என கூறினார் பிருந்தா. நீட் தேர்வு ரிசல்ட்டுக்காக தற்போது காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.