Home /viluppuram /

லாபம் தரும் முருங்கை சாகுபடி.. இப்படி செய்தால் நஷ்டம் இல்லை... வழிகாட்டும் விவசாயி..

லாபம் தரும் முருங்கை சாகுபடி.. இப்படி செய்தால் நஷ்டம் இல்லை... வழிகாட்டும் விவசாயி..

விழுப்புரம்

விழுப்புரம் - முருங்கை சாகுபடியில் நல்ல வருமானம்..

Drumstick Farming Methods : விழுப்புரத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தொரவி கிராமம். இப்பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடியில் உள்ள லாப, நஷ்ட விவரங்களை பகிர்கிறார் விவசாயி ஒருவர்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் அருகே தொரவி பகுதியில் அதிக அளவில் முருங்கை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடியில் நல்ல லாபம்  கிடைத்து வருவதால், அப்பகுதி  விவசாயிகளின் பிரதான விவசாயமாக முருங்கை விளங்குகிறது.

விழுப்புரத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தொரவி கிராமம். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயமே . இவர்கள் அந்தந்த பருவத்திற்கு ஏற்றார்போல விவசாயம் செய்து வருகிறார்கள்.

இப்பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  ஹைபிரிட் ரக வகையினையே இவர்கள் அதிகம் விளைவிக்கின்றனர்.. இங்கு விளையும் முருங்கை காய்கள், சென்னை கோயம்பேடு, புதுச்சேரி போன்ற முக்கிய காய்கறி சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  நாட்டு ரகத்தை விட ஹைபிரிட் வகைகளை மக்கள் அதிகளவில் விரும்பி வாங்குவதன் காரணமாகவே இதனை பயிரிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

முருங்கை சாகுபடி


முருங்கையில் நல்ல லாபம்:

முருங்கை சாகுபடி குறித்து அப்பகுதி விவசாயி ரகுராமன் (வயது 65) கூறியதாவது , “நான் 30 வருடங்களாக முருங்கை சாகுபடி செய்து வருகிறேன். இப்பகுதியில் என்னை போன்று பல விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகிறார்கள் இதற்கு காரணம்,  எங்கள் மண்ணில்  முருங்கை நல்ல விளைச்சல் தருகிறது. சுற்றுப்புற பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்து வருகிறோம்.

முருங்கை சாகுபடி


முருங்கை மரம் விவசாயிகளுக்கு நல்ல பலன் தரக்கூடியது. முருங்கையின்  பூ, காய், கீரை என அனைத்துமே நல்ல விலை போக கூடியதாகும். முருங்கை திடீரென விலை அதிகரிக்கும் திடீரென விலை குறையும். முருங்கை காய் கிலோ 20  முதல் 70 ரூபாய்க்கும் சில தினங்களில் கிலோ 120 க்கும் விற்பனையாகும். முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களில் முருங்கை நல்ல விலை போகும்.

முருங்கை சாகுபடி


விதைகள், நடவு கூலி, அதனை பராமரிப்பது,  பூச்சி மருந்து தெளிப்பது என ஒரு ஏக்கருக்கு  குறைந்தபட்சம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும்.   பராமரிப்பு சரியாக இருந்தால் நிச்சயமாக ஒரு ஏக்கரில்  700 கிலோ வரை முருங்கை காய்கள் கிடைக்கும்.

முருங்கை சாகுபடி


மழை காலத்தில் விலை சரிவு:

ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிலோ விதை பாக்கெட் போதுமானதாகும். நடவு முறையில் தான் விதையை நடவு செய்யவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் 4 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். தண்ணீர் போதுமான அளவு விட்டு பராமரிக்க வேண்டும். முருங்கை வருடத்திற்கு ஒரு முறை சாகுபடி செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மழை காலங்களில் மட்டுமே முருங்கையின் விலை குறையக்கூடும் அப்போதுதான் நஷ்டம் ஏற்படும் . மற்றபடி பார்த்தால் முருங்கை சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுத்து லாபம் பார்க்கலாம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி