Home /viluppuram /

யானை, குதிரைப்படைகளுடன் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேகம்.. மேல்பாதியில் களைகட்டிய திருவிழா..

யானை, குதிரைப்படைகளுடன் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேகம்.. மேல்பாதியில் களைகட்டிய திருவிழா..

விழுப்புரம்

விழுப்புரம் - தர்மராஜா வீதி உலா

Villupuram Latest News : விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேகம், யானைப்படை, குதிரைப்படை, கோலாட்டம் என விமரிசையாக நடைபெற்றது.

 விழுப்புரம்  மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதர்மராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரம்பரியம் மிகுந்த தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா நேற்றுமிக விமரிசையாக நடைபெற்றது .

கிராமம் முழுவதும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும்,தர்மரை வரவேற்கும் விதமாகவும் கிராமம் முழுவதும் பச்சை தென்னங்கீற்று, யானைப்படை, குதிரைப்படை, கரகாட்டம்,மயிலாட்டம், கேரளா மோளம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தர்மராஜா வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் பக்தர்கள் மலர்கள் தூவியபடி தர்மராஜா கடவுளை வரவேற்றனர்.

தர்மராஜா வீதி உலா


தர்மர் வெளியே வரும் போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவரக்ளுக்கு, தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கடவுளை நினைத்து வணங்கினால்,நிச்சயமாக அது நடக்கும்என்பதுஐதீகம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவிற்கு வருகை புரிந்தனர் .

தர்மராஜா வீதி உலா


இத்திருவிழாவை பற்றி பக்தர்கள் கூறியதாவது,

60 ஆண்டுகள் கழித்து தர்மராஜா பட்டாபிஷேகம் வீதிஉலா நடைபெறுவது மிக சந்தோஷமாக இருக்கிறது. இந்த திருவிழாவில் யானை ஊர்வலம், கோலாட்டம், மயிலாட்டம் போன்றவை பக்தர்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

60 ஆண்டுகள் கழித்துதர்மராஜா சாமியைபார்ப்பதில் எங்களுக்கு மிக சந்தோஷமாகவும், மன நிறைவாகவும்இருப்பதாகபக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி