ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு... ரூ.15,000 சம்பளம் 108 ஆம்புலன்சில் வேலை

விழுப்புரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு... ரூ.15,000 சம்பளம் 108 ஆம்புலன்சில் வேலை

108 ஆம்புலன்ஸ் வேலை

108 ஆம்புலன்ஸ் வேலை

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் வேலை செய்ய டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் வேலை செய்ய டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஆண்-பெண் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில், 108 அவசர ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக் கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு பங்கேற்கலாம். பி.எஸ்.சிநர்சிங், ஜி.என்.எம்,ஏ.என்.எம்,டி.எம்.எல்.டி (பிளஸ்-2 வகுப்பின் 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி.விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15,435 ஊதியம் வழங்கப்படுகிறது. டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள், பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

162.5 சென்டிமீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.15,235 ஊதியம் வழங்கப்படுகிறது. அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். உடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Government jobs, Job Vacancy, Local News, Villupuram