Home /viluppuram /

மூன்று ஆண்டுகளாக ரத்த தானம்- விழுப்புரத்தில் முன்னுதாரணமாக திகழும் இளைஞர்கள்

மூன்று ஆண்டுகளாக ரத்த தானம்- விழுப்புரத்தில் முன்னுதாரணமாக திகழும் இளைஞர்கள்

ரத்ததானக்

ரத்ததானக் குழு இளைஞர்கள்

விழுப்புரத்தில் இளைஞர்கள் அமைப்பு இரத்ததானக் குழு அமைத்து மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.சி மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இலவச ரத்த தானம் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ஆர்.சி மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்த சந்துரு தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மனிதம் காப்போம் என்ற தன்னார்வலர்கள் குழு செயல்பட்டுவருகிறது. அதன் மூலமாக விழுப்புரம் புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல மக்களுக்கு இலவச ரத்துதான சேவையை செய்து வருகின்றனர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரத்ததானம் செய்துள்ளனர்.

மேலும் இதுபற்றி சந்துரு கூறுகையில், மனிதம் காப்போம் தன்னார்வலர் குழு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்றால், என்னுடைய நண்பர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு ரத்தம் தருவதற்கு ஆளில்லை. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் ரத்த தானம் செய்து அவர் உயிர் பெற்றார். இந்த சம்பவம் எங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

ரத்த தானம் செய்யும் இளைஞர்


அதன் தொடர்ச்சியாக நாங்கள் மூன்று ஆண்டுகளாக தற்போது ரத்ததானம் செய்து வருகிறோம். ஒரு மாதத்திற்கு எங்கள் குழு மூலம் 30 முதல் 35 இந்த நபர்கள் ரத்ததானம் செய்ய நாங்கள் ஏற்பாடு செய்வோம். அதிகபட்சமாக பி பாசிட்டிவ், ஓ பாசிடிவ் ரத்தம் தான் அதிகளவில் தேவைப்பட்டு வருகிறது. பாண்டிச்சேரி மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு ரத்ததானம் வழங்கி வருகிறோம்.

ரத்ததானக் குழு இளைஞர்கள்


எங்கள் குழுவில் கண்ணுக்குத் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாமல் பல பேர் இந்த குழுவில் உள்ளனர். அனைவருமே படித்த பட்டதாரி இளைஞர்கள் ஆவார்கள். ரத்ததானம் செய்வது மட்டுமல்லாமல் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறோம்.

மேலும் எங்கள் கிராமத்தில் ஒரு சிறிய குறுங்காடு அமைக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் நாங்களும் இணைந்து 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி அதனை பராமரித்து வருகிறோம்.

எங்கள் குழுவின் ஒரே நோக்கம் என்னவென்றால் ரத்தம் கிடைக்காமல் எந்த ஒரு நபரும் இறக்கக் கூடாது என்பதேயாகும்.

எங்கள் குழுவில் இணைந்து எங்களுக்கு தூணாகவும், ஆதரவு அளித்துவரும் முகேஷ், அருண்குமார், அரவிந்த், பிரவீன், ரஞ்சித் குமார், ஜெயச்சந்திரன், கணேஷ், ஜான் கென்னடி, அருண் பாபு ஆகிய நண்பர்கள் அனைத்து இடத்திலும் கை கொடுத்து எங்கள் குழுவை தூக்கி விடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் முடிந்த வரை மற்றவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்வோம். எங்கள் கிராமத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம். கடைசிவரை மனிதம் காப்போம் என சந்துரு கூறினார்.

இந்த குழுவைத் தொடர்பு கொள்ள விரும்பினால் தொலைபேசி எண்ணை 9003170726 தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி