முகப்பு /விழுப்புரம் /

குறைந்த விலையில் '5 ஸ்டார் ஹோட்டல்' ரெசிபி.. விழுப்புரத்தில் அசத்தும் இளைஞர்!

குறைந்த விலையில் '5 ஸ்டார் ஹோட்டல்' ரெசிபி.. விழுப்புரத்தில் அசத்தும் இளைஞர்!

X
விழுப்புரம்

விழுப்புரம் உணவகம்

Viluppuram best hotel | விழுப்புரம் அடுத்து வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் '5 ஸ்டார் ' ஹோட்டல் ரெசிபிகளை தயாரித்து அசத்தி வரும் விழுப்புரம் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ளது விழுப்புரம் ஃபுட் கோர்ட். இங்கு மெல்டிங் மொமெண்ட்ஸ் ( Melting moments) கடையில் பைவ் ஸ்டார் ஓட்டலில் கிடைக்கும் உணவு வகைகளை இளைஞர் ஒருவர் சமைத்து வருகிறார்.

விழுப்புரம் அடுத்து வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் ஃபுட் கோர்ட்டில் பல்வேறு வகையான உணவு கடைகள் உள்ளன. அதில் மெல்டிங் மொமெண்ட்ஸ்

( Melting moments) கடையில் பைவ் ஸ்டார் உணவு வகைகளை செய்து அசத்துகிறார் குமரன் என்று இளைஞர்.

குமரன் டிப்ளமோவின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலான ரேடிசன் ப்ளூ டெம்பிள் பே ரிசார்ட், ஹோட்டல் ரெசிடென்சி ஆகிய கடைகளில் நான்கு வருடங்களாக பணிபுரிந்த பிறகு, பைவ் ஸ்டார் உணவுகள் இருக்கும் சுவைகளையும் அந்த உணவுகளையும் குறைந்த விலைக்கு நம் ஊரு மக்களுக்கு தரவேண்டும் என்று நோக்கத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு, விழுப்புரம் ஃபுட் கோர்ட்டில் தனக்கென ஒரு கடையை ஒதுக்கி சிறிய உணவு கடையை நடத்தி வருகிறார்.

இந்த உணவு கடையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் ரோஸ்டட் ரோஸ்மேரி சிக்கன்( Roasted Rosemery Chicken ), cheese loaded Nacho's with mexican salsa sauce, Fired ice cream, Tangy glazzed juicy wings, Veg Neapolitan fruili pasta, Alfredo white sauce pasta, Flaky fired chicken, Grilled mai steak lemon butter sauce ) ஆகிய உணவுகளை குறைந்த விலையில் சமைத்து பொதுமக்களுக்கு தருகிறார்.

மேலும் இது குறித்து பேசிய குமரன், நான் நான்கு வருடங்களாக பைவ் ஸ்டார் ஹோட்டலில் பணிபுரிந்தேன். எனக்கு நான் பணிபுரிந்த ஹோட்டலில் உள்ள பைவ் ஸ்டார் உணவுகளை குறைந்த விலையில் என்னோட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறிய தொழில் தொடங்கி தற்போது சிறந்த முறையில் உணவுக் கடை நடந்து வருகிறது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாப்பிட்டு செல்பவர்கள் இந்த உணவு ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது என்று கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Hotel Food, Local News, Viluppuram S22p13