முகப்பு /செய்தி /விழுப்புரம் / காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற இளைஞர்.. விழுப்புரம் அருகே வெறிச்செயல்!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற இளைஞர்.. விழுப்புரம் அருகே வெறிச்செயல்!

நர்சிங் மாணவியை கொலை செய்த இளைஞர்

நர்சிங் மாணவியை கொலை செய்த இளைஞர்

Viluppuram murder | வீட்டிற்கு அருகில் உள்ள கழிவறைக்கு சென்ற தரணியை, மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற இளைஞர் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததால், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவரின் 19 வயது மகள் தரணி. விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கழிவறைக்கு சென்ற தரணியை, மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற இளைஞர் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த தரணி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கணேசன், உயிரிழந்த மாணவியை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரணி பேசுவதை நிறுத்திவிட்டதால் ஆத்திரத்தில் அவரை கணேசன் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

First published:

Tags: Crime News, Local News, Lovers, Murder, Villupuram