Home /viluppuram /

செப்டம்பர் 1-ம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கக் கட்டணம் உயர்வு - முழு விவரம் இதுதான்

செப்டம்பர் 1-ம் தேதி முதல் விக்கிரவாண்டி சுங்கக் கட்டணம் உயர்வு - முழு விவரம் இதுதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்படம்பர் 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Vikravandi, India
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரமுள்ள, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நான்கு வழிச் சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

    இந்த நிறுவனம் நிா்வகித்து வரும் விக்கிரவாண்டி டோல்கேட்டில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, சுங்கச்சாவடியில் வருகிற 1-ம் தேதி முதல் டெல்லியில் உள்ள நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி, உயர்த்தப்பட உள்ள கட்டண விவரம், கார், வேன், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக ஒருமுறை பயணிக்க ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது இது ரூ.10 உயர்த்தப்பட்டு, ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. பல முறை பயணிக்க ரூ.135 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.150 ஆக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,660 ஆக இருந்த கட்டணம் தற்போது 385 ரூபாய் உயர்ந்து ரூ.3,045 ஆக உயர்ந்துள்ளது.

    இலகு ரக வாகனங்களுக்கு ரூ.155 ஆக இருந்த ஒரு வழி கட்டணம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.180 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.235 ஆக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.265 ஆகவும், மாதாந்திர கட்டணம் 4,650- ரூபாயிலிருந்து 680 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.5,330 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பேருந்து ஒருவழி கட்டணம் ரூ.310 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 45 ரூபாய் உயர்ந்து ரூ,355 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.465 ஆக இருந்த கட்டணம் 70 ரூபாய் உயர்ந்து ரூ.535 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.9,305-ல் இருந்து 1,360 ரூபாய் உயர்ந்து ரூ.10,665 ஆகவும் வசூலிக்கப்பட உள்ளது.

    பல அச்சு வாகனம், இரு அச்சுகளுக்குமேல் ஒரு வழி கட்டணம் ரூ.500 வசூலிக்கப்பட்ட நிலையில் 70 ரூபாய் உயர்ந்து ரூ.570 ஆகவும், பல முறை பயணிக்க ரூ.750ல் இருந்து 105 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.855 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.14,950 வசூலிக்கப்பட்டும் நிலையில், 2,190 ரூபாய் அதிகரித்து ரூ.17,140 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுதவிர பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ.1,000 ஆகவும், உள்ளூர் வாகன கட்டணம் வகை ஒன்று மாதாந்திர பாஸ் ரூ.150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ.300 என மாற்றமின்றி வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி