Home /viluppuram /

Viluppuram | இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பாரம்பரிய நெல் கண்காட்சி- பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Viluppuram | இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பாரம்பரிய நெல் கண்காட்சி- பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

விழுப்புரம்

விழுப்புரம் நெல் கண்காட்சி

Viluppuram | விழுப்புரத்தில் நடைபெறும் பாரம்பரிய நெல், அரிசி திருவிழாவில் மாணவர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய விதைகள் குறித்து தெரிந்துகொண்டனர்.

விழுப்புரத்தில் இன்று தொடங்கிய இயற்கை நெல், அரிசி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், அரிசி இடம்பெற்றிருந்தது. இக்கண்காட்சியில் விவசாயிகள், மாணவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.

விழுப்புரம் நகர பகுதியான கிழக்கு பாண்டி ரோடு, ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்திலுள்ள ஸ்ரீ ஜெயசக்தி திருமணம் மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் பாரம்பரிய நெல், அரிசி கண்காட்சி நடைபெறுகிறது. 4-ம் ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில், 1,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறி கீரை வகைகள், 100 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் விதைகளான சிவன்சம்பா, தூயமல்லி, கேரள சுந்தரி, சொர்ன மயூரி, கருங்குருவை, சம்பா சாரி, கெபு போட்டி, நாசர்பேட், குழியடிச்சான், மாப்பிள்ளை சம்பா, ஒட்டு கிச்சடி, ஹக்கி பாதாம் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களும், பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய காய்கறி விதைகள், போன்றவை இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது .

நெல் கண்காட்சி


இக்கண்காட்சி முக்கிய நோக்கம் என்னவென்றால் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் இயற்கை விவசாயம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பாரம்பரிய விதை திருவிழா நடைபெறுகிறது.

நெல் கண்காட்சி


இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டதை விவசாயிகள், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இதன் பயன்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

மேலும், பாரம்பரிய விதைகளான அவரை, பாகல், மிதி பாகல், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, யாழ்பானம் முருங்கை உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட காய்கறி விதைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டு விற்பனைக்கு வைக்கபட்டதை விவசாயிகள் வாங்கி சென்றனர்.

பள்ளி மாணவர்கள் ஒரு சில அரிசி வகைகள் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், பாரம்பரிய அரிசி வகைகளை ஒரே இடத்தில் பார்த்து தெரிந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், புத்தகங்களில் படித்ததை நேரில் பார்க்கும் போது இப்படி அரிசி வகைகள் இருக்கிறது என்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்காட்சி மூலம் பல்வேறு இயற்கை காய்கறி விதைகளையும், பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய நெல் ரகங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டோம் என பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி