விழுப்புரம் அடுத்துள்ள தொரவி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாகவும், மற்ற அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
விழுப்புரம் அடுத்த 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தொரவி என்ற கிராமம். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு 250 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போது 296 ஆக உயர்ந்துள்ளது . அதுவே இந்தப் பள்ளியின் முதல் வெற்றியாகும் என மகிழ்ச்சி கொள்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.
மற்ற பள்ளிகளைவிட இப்பள்ளிகளில் சுற்றுப்புற வளாகம் மிகத் தூய்மையாகவும், கழிவறைகள் மற்றும் கை அலம்பும் இடம் சுத்தமாகவும், பள்ளி மாணவர்கள் தங்களுடைய காலணிகளையும் மிக நேர்த்தியாக வரிசையாக கழட்டிவைக்கின்றனர்.

தொரவி ஊராட்சிப் பள்ளி
மேலும் பள்ளி வளாக சுற்றுச்சூழல் முழுவதும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் பூ செடிகள் போன்றவை வளர்க்கப்படுகிறது.
மேலும் இங்கு கல்விப் பயிலும் மாணவி அனுஷ்கா கூறியதாவது, இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் எங்களிடம் கனிவாகவும், எளியமுறையில் எங்களுக்கு பாடங்கள் புரிய வைப்பதற்காக நடனம் மற்றும் பாட்டு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.

வகுப்பறையில் மாணவர்கள்
மேலும் எங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை நாங்கள் மாணவர் அரசு என்ற புகார் பெட்டியில் தினமும் செலுத்துகிறோம். அதிலிருக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளை எங்களது பள்ளி ஆசிரியர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். எங்கள் சுற்றுப்புற வளாகம் மற்றும் கழிவறைகள் போன்ற அனைத்து வசதிகளும் எங்களுக்கு சிறப்பான முறையில் அமைந்து தந்துள்ளனர்.

செய்முறையுடன் பயிலும் மாணவர்கள்
எங்களுக்கு கணினி ஆய்வகம் மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடனம், பாட்டு, இசை மூலம் பாடங்களைக் கற்பித்து வருவதால் எங்களுக்கு எளியமுறையில் புரிகிறது. இந்தப் பள்ளியில் படிப்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என அனுஷ்கா கூறினார்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லையா கூறுகையில், இப்பள்ளி வளர்வதற்கான அனைத்து வகையிலும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
பள்ளி செல்வதற்கான கூகுள் மேப்:
மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்த பள்ளிக்காக 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள கணினியை வழங்கியுள்ளார். இந்த செயல் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
எனவே இந்த பள்ளியை தமிழ்நாடு அளவில் முதன்மை பள்ளியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுவோம் என தலைமையாசிரியர் செல்லையா கூறினார். தற்போது, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.