விழுப்புரம் அடுத்து கோலியனூர் பகுதியில் புத்துவாயம்மன் கோயில் உள்ளது. குழந்தைகளின் மேல் வரும் அம்மை நீங்குவதற்கு இந்த அம்மனை வழிபட்டால் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலமாக இக்கோயில் விளங்குகிறது.
விழுப்புரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில், கோலியனூர் என்னும் சிற்றூர் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் அருள்மிகு புத்துவாயம்மன் அம்மன் திருக்கோயில் உள்ளது. நினைத்த காரியம் நடைபெறுவதால் பொதுமக்கள் அதிக அளவில் இக்கோயிலுக்கு வருகை புரிந்து அம்மனை வழிபாடு செய்து செல்கின்றனர்.
அம்பாள் ஸ்ரீ ரேணுகாம்பாள் என்ற திருநாமத்துடன் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். பக்தர்கள் அனைவரும் படிப்பு, செல்வம் போன்றவற்றை கேட்டு இந்த அம்மனை வழிபாடு செய்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வேப்பிலை ஆடை உடுத்தி தீச்சட்டி ஏந்தி அம்பாள் வழிபாடு செய்தால் பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம் என கூறப்படுகிறது.

புத்துவாயம்மன்
கோயிலின் வலது புறத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள், இடது புறத்தில் புத்து வடிவில் புத்துவாயம்மன் காட்சி தருகிறாள். மேலும் முதலில் இக்கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பு பெருங்காடாக இருந்தது. பெருங்காட்டின் ஒரு பகுதியாக உள்ள பணங்குப்பம் எனும் பகுதியில் இருந்து பசு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு வரும்போது காட்டில் அமைந்திருந்த புற்று ஒன்றில் பால் சுரந்தது. தினமும் அந்த பசு புற்றுக்கு வந்து பால் சுரந்து விட்டு செல்லும்.

அம்மனை வழிபடும் பக்தர்கள்
இதே போல ஒரு நாள் புற்றுக்கு வந்து பால் சுரந்து ஒரு நாகம் அதை சாப்பிடுவதை அந்தப் பசுவின் மேய்ப்பன் கவனித்து உள்ளான். இந்த காட்சியை மிக அதிசயமாக பார்த்த மேய்ப்பன் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினான். மேலும் காட்டை ஆண்ட மன்னனிடம் பொதுமக்கள் கூற, புற்றினை சுற்றி ஆலயம் எழுப்பப்பட்டது. அதன் பின்பு காலப்போக்கில் பல திருப்பணிகள் செய்யப்பட்டது என கதைகள் கூறுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் பலர் தெய்வங்களாக கட்டப்பட்ட சுமார் 100 திருக்கோயில்கள் இருந்ததால் இவ்வூர் கோவில் புறநல்லூர் என அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் கோவில்புறநல்லூர் மருவி கோலியனூர் என்றானது பொதுமக்கள் கூறுகிறார்கள்.
இத்திருக்கோவிலுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் சித்ரா பௌர்ணமி, ஆடிவெள்ளி, நவராத்திரி உற்சவம், தை வெள்ளி, மாசிமகம் ஆகிய நாட்களில் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி முதல் 8 மணி வரையும் பூஜை நேரமாக கருதப்படுகிறது.
விழுப்புரம் புத்துவாயம்மன் கோவில் கூகுள் மேப்:
மேலும் இந்த அம்மனை நம்பிக்கையுடன் வழிபட்டால் கல்யாண தடை, குழந்தை பாக்கியம் போன்ற தடைகள் நீங்கும். இந்த அம்மனை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் எனவும், குழந்தைகளுக்கு வரும் அம்மை நீங்குவதற்கு இந்த கோயிலில் மூன்று மற்றும் ஐந்து நாட்கள் இங்கேயே தங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தங்களை அந்த குழந்தையின் மேல் உள்ள அம்மையில் தெளித்து வந்தால் உடனடியாக அம்மை நீங்கும் என அக்கோயில் பூசாரி தெரிவிக்கின்றார்.
இங்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவரும் முழு நம்பிக்கையுடன் இந்த கடவுளை வழிபட்டு மன திருப்தியாக செல்கிறோம் என வருகை புரிந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.