Home /viluppuram /

விழுப்புரம் நகராட்சிப் பள்ளியில் சுகாதாரமான கழிவறை இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

விழுப்புரம் நகராட்சிப் பள்ளியில் சுகாதாரமான கழிவறை இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

பூந்தோட்டம்

பூந்தோட்டம் அரசுப் பள்ளி

விழுப்புரம் நகராட்சி பூந்தோட்டம் பள்ளியில் கழிவறை சுத்தம் இல்லாததால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி பூந்தோட்டம் பள்ளியில் கழிவறை சுத்தம் இல்லாததால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். கழிவறையை சுத்தம் செய்வதற்கு நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா பூந்தோட்டம் குளப் பூங்காவிற்கு பக்கத்தில் நகராட்சி பூந்தோட்டப் பள்ளி அமைந்துள்ளது.

இந்த நகராட்சியில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் 66 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் 62 மாணவர்களும், மூன்றாம் வகுப்பில் 110 மாணவர்களும், நான்காம் வகுப்பில் 160 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 154 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

பள்ளியின் கழிவறை


மேலும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு விக்கிரவாண்டி, ஜானகிபுரம், பிடாகம், கப்பூர், நேமூர், தென்பேர், கெடார் போன்ற பல பகுதியிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

பூந்தோட்டம் அரசுப் பள்ளி


இப்பள்ளியில் கடந்த சில தினங்களாக பைப் லைன் பிரச்னையாலும், தண்ணீர் பற்றாக்குறையால் வரும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தம் இன்றி கிடக்கும் அவல நிலை உருவாகி வந்துள்ளது. கழிவறை உள்ளே நுழைந்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் அளவிற்கு கழிவறை காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது .

நகராட்சி ஊழியர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பள்ளியில் கழிவறை வசதி, கட்டட வசதி, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைகின்றனர்.

மேலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பள்ளியில் நல்ல கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுத் தருகிறார்கள். ஆனால் கட்டிட வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளில் தான் கடும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும். தினமும் கழிவறையை சுத்தம் செய்வதற்கு நகராட்சி சார்பில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் பள்ளிக்கு என்று ஒரு காவலாளி நியமிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி