முகப்பு /விழுப்புரம் /

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி!

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி!

X
பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Villupuram News | விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை விற்பனை செய்த கடைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது  நகராட்சி நிர்வாகம்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் விழுப்புரத்தில் உள்ள முக்கியமான வீதியில் உள்ள கடைகளில் நெகிழிகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்,விழுப்புரம் சின்ன மார்க்கெட் வீதியில் இயங்கி வரும் பத்மா ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பாதாள அறைகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருட்களை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து அரசு முத்திரைத்தாளில் கடையின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அரசு தடை செய்த நெகிழிப் பொருட்களை விற்பனை செய்தால் இனி வரும் நாட்களில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் விழுப்புரம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Villupuram