விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2023-ன் இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சாகை வார்த்தல் நிகழ்வுவுடன் கடந்த 22ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
இந்நிலையில், கூத்தாண்டர் கோவிலின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்வும் தேரோட்டமும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. கூவாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்திற்கு வருகின்றனர்.
திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் மிஸ் கூவாகம் போட்டி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பொன்முடி, செஞ்சி மஸ்தான், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இதனை அடுத்து திருநங்கைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சுயதொழில் செய்வதற்கான காசோலை ஆகியவற்றை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து திடீரென மழை பெய்ததால் மிஸ்கூவாகம் இறுதி போட்டியானது மழையால் ரத்து செய்யப்படதையொட்டி நாளை மாற்று இடத்தில் நடைபெறும் என தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Viluppuram S22p13