Home /viluppuram /

Viluppuram | பள்ளி மாணவர்களைக் கவர்ந்த ஜம்மு நாவல் பழங்கள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

Viluppuram | பள்ளி மாணவர்களைக் கவர்ந்த ஜம்மு நாவல் பழங்கள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

நாவல்

நாவல் பழ விற்பனை

Viluppuram | விழுப்புரம் திருவிக வீதிகளில் ஜம்மு நாவல் பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் திருவிக வீதிகளில் ஜம்மு நாவல் பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு நாவல் பழம் கிலோ 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழத்தினை நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் பொதுமக்கள் அழைக்கப்பார்கள். இந்தப் பழம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. தற்போது நாவல் பழம் சீசன் என்பதால் வியாபாரிகள் அதிகளவில், வெளிமாவட்டங்களிலிருந்து நாவல் பழத்தினை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

அதுபோல விழுப்புரத்தில் திருவிக வீதிகளில் உள்ள கடைவீதிகளில் அதிகளவில் ஜம்மு நாவல் பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஜம்மு நாவல்பழம் சீசன் என்பதால் வியாபாரிகள் அதனை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஈச்சம் பழமும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாவல் பழ விற்பனை


ஜம்பு நாவல்பழம் சென்னை, ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போது இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஜம்மு நாவல் பழம் பார்ப்பதற்கு மிக அழகாக, பருமன் கொண்டதாகும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாட்டு நாவல் பழத்திற்கும், ஹைபிரிட் நாவல் பழத்திற்கும் சுவைகளை வித்தியாசம் உள்ளது.

நாட்டு நாவல் பழம் சற்று துவர்ப்பு சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் ஹைபிரிட் ஜம்மு நாவல் பழம் கூடுதல் இனிப்பு சுவையை கொண்டதாக இருக்கும். இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இதனை வாங்கி செல்கின்றனர். தற்போது ஜம்மு நாவல் பழம் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாவல் பழம்


மேலும் நாவல் பழம் விற்பனை குறித்து வியாபாரியான சங்கம் கூறுகையில், தற்போது ஹைப்ரிட் ரக ஜம்மு நாவல் பழத்தின் பருவம் என்பதால் பொதுமக்கள் இந்த பழத்தினை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டு நாவல் பழம் அடுத்தமாதம் சீசன் என்பதால், தற்போது இந்த நாவல் பழத்தின் விற்பனை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது .

மேலும் இந்த வீதிகளில் பள்ளிகள், கடை வீதிகள் உள்ளதால் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வாங்கி செல்கின்றனர் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாவல் பழத்தை உலர்ந்த பழங்கள் ஆகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது அதிக சுவை கொண்டதால் இந்த படத்திற்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி