விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷச்சாராயத்தால் 14 பேர் உயிரிழந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலும் சோகம் நிலவிவருகிறது. பல குடும்பங்களும் தாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.
எக்கியார்குப்பம் மீனவக் கிராமத்தில் மரண ஓலங்கள் கேட்டு வருகின்றன. விஷச் சாராயத்தால் இந்த கிராமத்தில் 14 உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தையை இழந்து ஒரு குடும்பமே நிற்கதியாக நிற்கிறது. தனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் தனக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை என்கிறார் கீதா.
வேல்முருகன் என்பவர், தனது குடும்பத்தில் 6 பேர் இறந்துவிட்டதாகவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும், சுனாமி தாக்கியபோதும் எந்தப் பலியும் ஏற்படாத இந்த கிராமம், தற்போது சோகமே உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் அவர்களது உறவினர் காத்தாயி.
இதேபோன்று, குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களின் மரண ஓலங்கள் கண்கலங்கச் செய்கின்றன. இந்த மீனவக் கிராமத்தைப் பொருத்தவரை, ஒவ்வொரு குடும்பமும் கடலில் போய் இறங்கி காலை முதல் இரவு வரை பணியாற்றும் ஆண்களை நம்பியே இருந்தன. தற்போது, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
செய்தியாளர்: ரகுவரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Viluppuram S22p13