Home /viluppuram /

Viluppuram | சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்

Viluppuram | சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்

விழுப்புரம் அரசுக் கட்டிடம்

விழுப்புரம் அரசுக் கட்டிடம்

Viluppuram | விழுப்புரம் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய கூடுதல் கட்டிடங்களைக் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உதவி புரிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாடின்றி இருந்தன.

விழுப்புரம் நகராட்சிக்குட்ட மகாராஜபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாதந்தோறும் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் இங்கு நடைபெறுகிறது.

விழுப்புரம் அரசுக் கட்டிடம்


இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன.

விழுப்புரம் அரசுக் கட்டிடம்


புதியதாக கட்டப்பட்ட கழிவறைகள் அரசு இடத்தில் கட்டாமல் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் கட்டியது தெரியவரவே கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடைய கட்டிடமும், கழிவறை கட்டிட கட்டுமான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்டிடங்கள் பயன்பாடின்றி இருந்து வருவதால் அதனை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த கட்டிடங்களை மது அருந்தும் இடமாக பயன்படுத்துவதோடு பலவித சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு புதியதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் கழிவறை கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காததால் அந்த கட்டிடங்கள் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே கிடப்பில் போடப்பட்ட கட்டிட பணிகளை மீண்டும் துரிதப்படுத்தி கட்டிட பணியை மேற்கொண்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி