Home /viluppuram /

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்!!

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்!!

விழுப்புரம்

விழுப்புரம் - சுதந்திர தின விழா

இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுத பெரு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் பள்ளி மாணவர்கள் ஈட?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுத பெரு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்காக பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா பெரும் விழாவாக  கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றிலிருந்து வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, மூவர்ண கொடி அனைத்து வீடுகளிலும் பறக்கவிடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் ஆட்சியர் வளாகம் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தின விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாணவர்கள்


விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள், இன்று கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாணவர்கள்


சேகர்ட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, இ எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் ஸ்கூல், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாரதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, தி கிளாரிபெல் மெட்ரிக் ஸ்கூல், இமேஜ் டான்ஸ் ஸ்கூல் என 9 பள்ளியில் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாணவர்கள்


ஒவ்வொரு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் நடனமாடி,திறமைகளை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் சிலம்பம் மல்லர் கம்பம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி சார்ந்த ஆசிரியர்கள், ஆடு நிர்வாகம் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Students rehearsing for the Independence Day Festival Show!!
கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட மாணவர்கள்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது இது போன்று ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபடுவது எங்களுக்கு ஒரு தனி தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறது நாங்கள் நிச்சயமாக சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தைரியமாக பங்கேற்பும் அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளில் மறக்காமல் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Villupuram

அடுத்த செய்தி