Home /viluppuram /

Viluppuram | தேவையற்ற பொருள்களிலிருந்து கைவினைப் பொருள்கள்- அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சி

Viluppuram | தேவையற்ற பொருள்களிலிருந்து கைவினைப் பொருள்கள்- அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சி

கைவினைப்

கைவினைப் பொருள்களுடன் ஆசிரியை

விழுப்புரத்தில் பயன்படாத பொருள்களிலிருந்து கைவினைப் பொருள்கள் செய்யும் கலையை மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியை கற்றுக்கொடுத்துவருகிறார்.

பொதுமக்கள் தேவையில்லை என தூக்கி எறியும் பல பொருட்களை கொண்டு, ஒருசிலர் கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். தற்போது அது போன்ற கைவினைப் பொருட்களுக்கு அதிக மவுசு பொதுமக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அதுபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை வளர்ப்பதற்காக புதுவித முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அரசு பள்ளி சேர்ந்த ஆசிரியர் ஹேமலதா.

விழுப்புரம் அடுத்து நித்யா நர்சரி கார்டன் பக்கத்தில், அரசு பள்ளி ஆசிரியரான ஹேமலதா என்ற தமிழாசிரியர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.



இந்த முயற்சி குறித்து ஹேமலதா கூறுகையில், ’ஆர்ட்ஸ் ஃப்ரம் நேச்சுரல் என்ற பேஜ்யை ஃபேஸ்புக்கில் பார்த்து, அதை தொடர்பு கொண்டு, அந்தப் பேஜ்க்கு தொடர்புடைய அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியரான உமாபதியை சந்தித்து பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். இரண்டு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.



அதன்பின் என்னுடைய முன்னாள் மாணவன் ஷர்மா( BSC Chemistry ) ஏற்கனவே உமாபதியிடம், இந்த இதுபோன்ற கைவினைபொருட்கள் பயிற்சி பெற்று வந்திருந்தான்.



அரசு பள்ளி ஆசிரியர் என்பதாலும், வருகை புரிந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக இந்த கைவினைப் பயிற்சி கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் என்னுடைய மாணவன் ஷர்மா, புதுவையை சேர்ந்த மாணவன் பவித்ரன் இருவரும் இணைந்து என்னுடன் சேர்ந்தனர். நாங்கள் மூவரும் கைவினை பயிற்சியில் ஈடுபட்டோம்.



இந்த பயன்படாத பொருள்களைக் கொண்டு ஆசிரியர் மாணவர்கள் பாடம் நடத்துவது, பறை இசைப்பது, மாணவர்கள் பள்ளிக்கு செல்வது, தாய் குழந்தைக்கு பாலூட்டுவது, வேட்டையாடுவது, மயில் போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கிய கைவினைப்பொருட்கள் செய்தோம்.



இந்த கைவினைப் பொருட்கள் அனைத்தும், சோளக்கதிர் இழைகள், தேங்காய் நார், ஓடு, காய், மரத்துண்டு, பனை மரப் பொருட்கள் கொண்டு செய்யப்பட்டது.

இந்த கைவினைப் பொருட்கள் செய்வதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் மாணவர்களுக்கு கற்றல் திறனை வளர்க்க வேண்டும் என்பதாலும், பாடம் கற்பதில் புதுவித முயற்சியை கையாள வேண்டும் என்பதற்காகவும் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களைப் புரிந்து கொள்வார்கள் எனவும், அதுமட்டுமல்லாது மாணவர்களின் படைப்பாற்றல், சுயமாக சுயதொழில் செய்வதற்கான வழி வகை இவை இந்த கைவினைப் பொருட்கள் செய்வது மூலம் ஏற்படுகிறது என ஹேமலதா கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி