Home /viluppuram /

விழுப்புரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு.. காரணம் என்ன?

விழுப்புரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு.. காரணம் என்ன?

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District Latest News : விழுப்புரம் மாவட்டத்தில், சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஆடி மாத பக்தர்களின் வழிபாடுகள் காரணமாக பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆடி மாத கோயில் திருவிழாக்கள், பூஜைகள் பொதுமக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் மற்றும் மழை காரணமாக பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் அதிக அளவில் லாபம் இல்லை எனக் கூறும் வியாபாரிகள்.

ஆடி மாதத்தில் கோயில் பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் என களைகட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஆடி மாத பக்தர்களின் வழிபாடுகள் காரணமாக பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. நேற்றை விட இன்று பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது ஒரு சில பூ 2 வகைகள் நேற்றைய விலையின்படியே உள்ளது.

விழுப்புரம் பூ மார்க்கெட்


ஒரு கிலோ சம்மங்கி பூநேற்று 300 ரூபாய்க்கும் இன்று 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ பன்னீர் ரோஜா 250 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும், அரளி பூ கிலோ 400 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை கிலோ 60 ரூபாய்க்கும், கல் ரோஜா கிலோ 200 ரூபாய்க்கும், சாமந்தி 350 ரூபாய்க்கும், கேந்தி சாமந்தி 80 ரூபாய்க்கும், குண்டுமல்லி கிலோ 1200 ரூபாய்க்கும், முல்லை கிலோ 1,000 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 1,500 ரூபாய்க்கும் இன்று விற்பனையாகிறது.

விழுப்புரம் பூ மார்க்கெட்


விலை உயர்வுக்கு காரணம்?

மேலும் பூக்கள் விலை குறித்து பூ வியாபாரியான சிவகுமார் கூறியதாவது,சாதாரணமாக 20 ரூபாய் 40 ரூபாய்க்கு விலை போகக் கூடிய கோழிக்கொண்டை பூ, கேந்தி சாமந்தி இன்று இரு மடங்காக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் பூ மார்க்கெட்


ஏனென்றால் ஆடி மாதம் விசேஷம், மழையின் காரணமாக விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. விலை என்னதான் உயர்ந்து இருந்தாலும் வியாபாரியான எங்களுக்கு போட்ட முதலீடு மட்டும்தான் கிடைக்கிறது லாபம் சொல்ற அளவுக்கு இல்லை.

விழுப்புரம் பூ மார்க்கெட்


பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிந்து பூக்களை வாங்கி செல்கின்றனர் ஆனால் குறைந்த விலைக்கே பூக்களை கேட்பதால் சற்று லாபம் குறைந்துள்ளது. இருந்தாலும் பொது மக்களுக்காக கேட்கும் விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Villupuram

அடுத்த செய்தி