Home /viluppuram /

Viluppuram | தேவாரப் பாடல் பெற்ற கடைசி சிவாலயம் இதுதான்! - இங்கே வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

Viluppuram | தேவாரப் பாடல் பெற்ற கடைசி சிவாலயம் இதுதான்! - இங்கே வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவன் கோவில்

சிவன் கோவில்

விழுப்புரம் மாவட்டம், சேமங்கலத்தை அடுத்துள்ள கிளியனூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற கடைசி சிவாலயம் ஆகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    தமிழகத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவதலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன. தேவாரப் பாடல் பெற்ற கடைசி சிவாலயம் விழுப்புரத்தில் உள்ளது. அகத்தியர் வழிபட்டதால் இது அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது.

    திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் "தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும் கிளியன்ன வூரனே” என்று பாடியுள்ளார். இங்கே சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கும் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.

    சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இக்கோவிலில் தென்புறக் கருவறைச் சுவரில் உள்ள கல்வெட்டில் சோழ மன்னனின் பெயர் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மதுரை பரகேசரி வர்மன் முதல் பராந்தகன் காலத்தில் இந்த கோவில் கருங்கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலில் திங்கட்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வேண்டிய வரம் கிடைக்கும் என்றும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பக்தர்கள் அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோருக்கு அபிஷேகம் செய்து, பட்டாடை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

    சிறிய கிராமமாக இருக்கும் கிளியனூர் 6 மற்றும் 7ம் நூற்றாண்டுகளில் செல்வ செழிப்புடன் விளங்கியதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. திண்டிவனத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கிளியனூர் கோவில்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி