முகப்பு /விழுப்புரம் /

காதலர் தினத்தை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த ரோஜா பூக்கள் விலை!

காதலர் தினத்தை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த ரோஜா பூக்கள் விலை!

X
Expensive

Expensive roses on Valentine's Day

Viluppuram Flower market | விழுப்புரம் மலர் சந்தைகளில் காதலர் தின கொண்டாட்டத்தின் காரணமாக ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் காதலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆண்டுதோரும்கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். பூக்கள் என்றாலே பெண்களுக்கு பிடிக்கும் அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அதற்கு ஏற்றார் போல காதல் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்கு கொடுப்பது ரோஜா மலர்களை ஆகும்.

விழுப்புரம் மாவட்டம் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.குறிப்பாக, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

காதலர் தினத்தை கொண்டாடுவதன் காரணமாக 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஒரு ரோஜா கிப்டாக பேக் செய்து விற்பனை செய்தால் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரோஜா பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்காக மலர்களால் ஆன பொக்கே தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொக்கே 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் சந்தைகளில் ரோஜாப்பூக்களை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வியாபாரமும் நல்ல முறையில் நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Lovers day, Valentine's day, Villupuram