முகப்பு /செய்தி /விழுப்புரம் / "காலையிலேயே குடிச்சிட்டு வீட்டுக்கு வருவியா.." கண்டித்த தந்தையை ஓட ஓட வெட்டி கொன்ற மகன்!

"காலையிலேயே குடிச்சிட்டு வீட்டுக்கு வருவியா.." கண்டித்த தந்தையை ஓட ஓட வெட்டி கொன்ற மகன்!

தந்தை - மகன்

தந்தை - மகன்

Villupuram murder | குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகனை கண்டித்த தந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே காலையிலேயே மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததற்காக கண்டித்த தந்தையை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68) - ரங்கநாயகி(65) தம்பதி. இவர்களுக்கு சுப்பிரமணியன் (40), மீனாட்சி (37), சக்திவேல் (35) மற்றும் மாரிமுத்து (32) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். 3 பேருக்கு திருமணமான நிலையில், மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணமாகவில்லை.

பெரிய மகனான சுப்பிரமணியன் கூலி வேலை செய்து வந்த நிலையில் சமீப காலமாக மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தந்தை பாலகிருஷ்ணன் காலையிலேயே மது அருந்திவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது என்று மகன் சுப்ரமணியனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் வீட்டில் இருந்த டிவி மற்றும் சமையல் அடுப்புகளை தூக்கிப்போட்டு உடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியத்தை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் போதை தலைக்கேறியதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து தந்தையின் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார்.

Also Read:  கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி..!

இதனால் அச்சமடைந்த தந்தை, அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்தும் சுப்பிரமணியன் ஓட ஓட விரட்டி சென்று தந்தையின் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

    First published:

    Tags: Crime News, Local News, Murder, Viluppuram S22p13