ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் : மாவொளி என்றால் என்ன என்று 2கே கிட்ஸ்க்கு தெரியுமா?

விழுப்புரம் : மாவொளி என்றால் என்ன என்று 2கே கிட்ஸ்க்கு தெரியுமா?

X
விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District News : கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை)  முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதையொட்டி அகல் விளக்குகள் மற்றும் மாவொளி விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

கார்த்திகை தீபத்திருநாள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதையொட்டி அகல் விளக்குகள் மற்றும் மாவொளி விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட பல விதமான அகல் விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் ஆங்காங்கே முளைத்திருக்கின்றன.

விழுப்புரம் காந்தி சிலை பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் அகல் விளக்குகள் 5 ரூபாயிலிருந்து 550 ரூபாய் வரைக்கும் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள். இதனை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றன.

இதையும் படிங்க : மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி!

இதேபோன்று கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு பனை மரத்தின் பூ (பாலக்கட்டை) எரிக்கப்பட்டு, அதன் கரியை நுணுக்கி ஒரு பையில் போட்டுத் தைப்பார்கள். தைக்கப்பட்ட பை மீது, சிறிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் இடுக்கில் வைத்துக் கட்டுவார்கள். அந்த மட்டையின் மேல் நுனியில் ஒரு கயிறைக் கட்டிக்கொண்டும், மறுநுனியில் உள்ள பொட்டணப் பை மேல் நெருப்பு கனுங்குகளை வைத்து சுற்றுவார்கள்.

அதேபோல் முத்திய பீர்க்கங்காய் குடிவையில் கரித்தூளை அடைத்து அதன் நுனியில் கயிறு கட்டி சுற்றுவார்கள். பார்ப்பதற்கு பலநூறு கம்பி மத்தாப்புகளை ஒன்று சேர்த்து சுற்றுவது போல் தீப்பொறி அவர்களைச்சுற்றி சுழன்று வரும். இதன் மூலம் துன்பம் எல்லாம் கொட்டி தீர்ந்து இன்பம் ஒளியாய் ஒளிரும் என்பது ஐதீகம்.

இதனால் தீபத்திருநாளில் பல பகுதிகளில் விளக்குகள் ஏற்றுவார்கள் அது மட்டுமல்லாமல் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் மாவொளியை சுற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படித்தான் 90ஸ் கிட்ஸ் கார்த்திகையை கொண்டாடுவர். 2 கே கிட்ஸ்க்கு மாவொளி என்றால் என்ன என்று தெரியுமா?

First published:

Tags: Karthigai Deepam, Local News, Vizhupuram