ஹோம் /விழுப்புரம் /

தீபாவளி பரபரப்பு- போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்

தீபாவளி பரபரப்பு- போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் பேருந்து நிலையம்

Viluppuram | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், விழுப்புரம், கடும் போக்குவரத்து நெரிசலில் திக்கித் திணறி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில், நேற்றைக்கு முந்தைய நாள் இரவு முதல் சென்னையில் இருந்து, பேருந்துகள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளன.

சென்னை போன்ற பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு வருகை புரிகின்றன. இதனால் விழுப்புரத்தில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை வரும், 24ல் கொண்டாடப்படுகிறது. சென்னை, போன்ற பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை, படிப்பு, தொழில் காரணமாக விழுப்புரத்தில் தங்கியுள்ளனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர் செல்ல மக்கள் ஒன்றாக படையெடுத்தனர்.

இதற்காக, விழுப்புரம் பழைய, புதிய பேருந்து நிலையம், குறிப்பாக ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதுமட்டுமல்லாமல், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13